முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை வடமாகாண தேர்தல்: தமிழ் தே.கூ. வலியுறுத்தல்

சனிக்கிழமை, 13 ஜூலை 2013      உலகம்
Image Unavailable

 

யாழ்ப்பாணம், ஜூலை. 14 - இலங்கையின் வடமாகாண சபை தேர்தலுக்கு முன்பு ராணுவத்தினர் எண்ணிக்கையை கணிசமாகக் குறைக்க வேண்டும் என்று அந்நாட்டு தேர்தல் ஆணையத்திடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது. இலங்கையில் தமிழர் வாழும் வடக்கு மாகாண சபைக்கான தேர்தல் செப்டம்பரில் நடைபெற உள்ளது. 25 ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெறும் இத்தேர்தல் தொடர்பாக தேர்தல் ஆணையம் அனைத்து கட்சிகளுடனும் ஆலோசனை நடத்தி வருகிறது. இந்த ஆலோசனையின் போது ராணுவத்தினரின் எண்ணிக்கையை வடக்கில் இருந்து கணிசமாகக் குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர். இது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி. சுமந்திரன் கூறுகையில், 

வடக்கு மாகாணத்தில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளதால் மக்கள் சுந்திரமாக நடமாட முடியவில்லை. வரும் செப்டம்பரில் தேர்தல் நடைபெற உள்ளதால் அதற்கு முன்னதாக ராணுவ வீரர்களின் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையரிடம் வலியுறுத்தி உள்ளோம். ஆனால் அதை தேர்தல் ஆணையம் நிராகரித்துவிட்டது. எனினும், நிர்வாக நடவடிக்கைகளில் ராணுவ தலையீட்டை குறைத்து போலீசாரை ்ஈடுபடுத்த தேர்தல் ஆணையம் உறுதி அளித்துள்ளது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்