முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒரிஸ்ஸாவில் ரயில்கள் மோதலில் 26 பேர் படுகாயம்

வியாழக்கிழமை, 5 மே 2011      இந்தியா
Image Unavailable

 

போலாங்கீர், மே 5 - ஒரிஸ்ஸா மாநிலத்தில் சரக்கு  ரயில் மீது எக்ஸ்பிரஸ் ரயில் மோதியது. இதில் 26 பேர் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஒரிஸ்ஸா மாநிலம் போலாங்கீர் மாவட்டத்தில் சிக்கீர் ரயில் நிலையத்தில் ஒரு சரக்கு ரயில் வெளியே சென்று கொண்டிருந்தது. அப்போது அதே ரயில் தண்டவாளத்தில் கோராக்பூர் - ரூர்கேலா பயணிகள் எக்ஸ்பிரஸ் ரயில் உள்ளே வந்து கொண்டிருந்தது. அப்போது இரு ரயில்களும் ஒரே பாதையில் நேருக்கு நேர் டமால் என்று மோதிக்கொண்டன. 

இந்த விபத்தில் 26 பயணிகள் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் அனைவரும் டிட்லாகார் நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு சில பயணிகளின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

டிட்லாகாரில் நின்ற எக்ஸ்பிரஸ் ரயில் சிக்கீர் ரயில் நிலையத்தில் நிற்க தேவையில்லை. ஆனால் அந்த ரயிலின் டிரைவர் சிக்கீர் ரயில் நிலையத்தில் ரயிலை நிறுத்திய போதுதான் இந்த விபத்து நேரிட்டது. 

விபத்து ஏற்பட்டதும் ரயில்வே போலீசாரும், ஊழியர்களும் விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

மீட்பு ரயில் ஒன்று வரவழைக்கப்பட்டு அதில் பயணிகள் ஏற்றப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்து ரயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்