முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இரட்டை வெற்றிக்கு பின் இந்திய கிரிக்கெட் அணி திரும்பியது

திங்கட்கிழமை, 15 ஜூலை 2013      விளையாட்டு
Image Unavailable

 

புதுடெல்லி, ஜூலை. 16 - இந்திய கிரிக்கெட்அணி இரண்டு மாத வெளிநாட்டு சுற்றுப் பயணத்தை முடி த்துக் கொண்டு வெற்றிகரமாக நாடு திரும்பியுள்ளது. இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் தோனி தலைமையில் கடந்த ஒரு மாத த்திற்கும் மேலாக வெளிநாடுகளில் சுற் றுப் பயணம் செய்து 2 பெரிய போட்டி களில் ஆடியது. முன்னதாக இங்கிலாந்தில் ஐ.சி.சி. சா ம்பியன்ஸ் கோப்பை போட்டி நடந்த து. இதில் இந்திய அணி இறுதிச் சுற்றில் இங்கிலாந்தை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது. 

அங்கிருந்து நேராக மே.இ.தீவு சென்ற து. அங்கு 3 நாடுகள் கலந்து கொண்ட முத்தரப்பு ஒரு நாள் தொடரில் பங்கு கொண்டது. 

இந்தப் போட்டியின் லீக் ஆட்டத்தில் கேப்டன் தோனிக்கு காயம் ஏற்பட்ட

து. இதனால் தற்காலிக கேப்டனாக விராட் கோக்லி நியமிக்கப்பட்டார். 

இறுதிச் சுற்றில் கோப்பையைக் கைப் பற்ற இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதின. பரபரப்பான ஆட்டத்தி ல் இந்தியா 1 விக்கெட் வித்தியாச த்தி ல் வெற்றி பெற்று கோப்பையை தனது வசமாக்கியது. 

காயத்திலிருந்து குணமடைந்த தோனி இறுதிப் போட்டியில் கடைசி கட்டத்தி ல் அதிரடியாக ஆடி அணிக்கு வெற்றி தேடித் தந்தார். அவர் 45 ரன்னை எடுத் து ஆட்டம் இழக்காமல் இருந்தார். 

இந்திய அணி அடுத்ததாக ஜிம்பாப்வே க்கு எதிரான தொடரில் ஆட இருக்கிற து. இந்தத் தொடரில் கேப்டன் தோனி க்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ஒரு மாத ஓய்வில் அவர் லண்டன் செல் வார் என்று கூறப்படுகிறது. 

ஆனால் இந்திய அணியில் இடம் பெற்ற வீரர்களில் அதிகமானோர் இரண்டு  மாத கால சுற்றுப் பயணத்தை முடித்து க் கொண்டு நாடு திரும்பியுள்ளனர். 

இந்தப் பயணம் குறித்து இஷாந்த் சர் மாவிடம் கேட்ட போது, 2 மாத கால த்திற்குப் பிறகு நாடு திரும்பியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் இதில் மோசமான விஷயம் என்னவென்றால் நேரத்திற்கு தகுந்தவாறு அட்ஜஸ்ட் பண்ண முடியவில்லை என்பது தான் என்றார் அவர். 

துவக்க வீரராக பதவி உயர்வு பெற்று வெளிநாட்டுத் தொடரில் கலக்கிய ரோ கித் சர்மா மிக மகிழ்ச்சியுடன் காணப் படுகிறார். டெல்லி வந்த அவர் அங்கி ருந்து மும்பை செல்கிறார். 

இந்திய அணி சாம்பியன்ஸ் கோப்பை மற்றும் முத்தரப்பு தொடர் கோப்பை ஆகியவற்றை கைப்பற்றியதில் இந்திய வீரர்கள் உற்சாகத்துடன் காணப்படுகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்