முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெஸ்ட் இண்டீஸை பிரித்து மேய்ந்த ஷாஹித் அப்ரிதி!

திங்கட்கிழமை, 15 ஜூலை 2013      விளையாட்டு
Image Unavailable

 

ஜார்ஜ்டவுன், ஜூலை - 16 -  மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் பாகிஸ்தானின் ஷாஹித் அப்ரிதி பேயாட்டம் ஆடி விட்டார். பேட்டிங்கிலும், பின்னர் பந்து வீச்சிலும் மேற்கு இந்தியத் தீவுகளை நையப்புடைத்து விட்டார். அப்ரிதி விளையாடினால் அது அதிரடியாகத்தான் இருக்கும். பேட்டிங்காக இருந்தாலும் சரி, பவுலிங்காக இருந்தாலும் சரி. பெரிய இடைவெளிக்குப் பிறகு பாகிஸ்தான் அணியில் இடம் பெற்று ஆட வந்துள்ள அப்ரிதி தனது முதல் போட்டியிலேயே மிரட்டி விட்டார்.

 

சாம்பியன்ஸ் மிஸ் கடந்த மாதம் இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணியில் இடம் பிடிக்காமல் கைவிடப்பட்டவர் அப்ரிதி. காத்திருந்தது வீண் போகவில்லை அணியில் மீண்டும் இடம் பெற கடுமையாக போராடிக் கொண்டிருந்தார். அவரது நம்பிக்கையும், காத்திருப்பும் வீண் போகவில்லை என்பதை தற்போது நிரூபித்துள்ளார்.

முதல் போட்டியிலேயே மிரட்டல் மேற்கு இந்தியாவுடனான ஒரு நாள் போட்டித் தொடருக்கான பாகிஸ்தான் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் அப்ரிதி.

 

ஜார்ஜ்டவுனில் செம சாத்து ஜார்ஜ்டவுனில் நடந்த முதல் போட்டியில், பாகிஸ்தான் அணிக்கு அபாரமான வெற்றியைத் தேடிக் கொடுத்துள்ளார் அப்ரிதி, தனது அபாரமான ஆட்டத்தால். முதலில் பேட்டிங் பேயாட்டம் முதலில் பேட்டிங்கில் பின்னி எடுத்தார். 55 பந்துகளைச் சந்தித்த அவர் 5 சிக்ஸ், 6 பவுண்டரிகளுடன் 76 ரன்களைக் குவித்தார்.

 

பந்து வீச்சில் பயமுறுத்தல் அடுத்து பந்து வீச்சில் விஸ்வரூபத்தைக் காட்டி விட்டார். அவரது பந்து வீச்சில் மேற்கு இந்தியத் தீவுகளின் முதுகெலும்பே முறிந்து போய் விட்டது. 9 ஓவர்களை வீசிய அவர் 3 மெய்டன்களைப் போட்டார். அத்தோடு நில்லாமல் வெறும் 12 ரன்களை மட்டுமே கொடுத்து 7 விக்கெட்களை அள்ளி விட்டார்.

 

ஒரு நாள் வரலாற்றில் 2வது பெஸ்ட் ஒரு நாள் போட்டிகள் வரலாற்றில் இலங்கையின் சமிந்தா வாஸ் 19 ரன்கள் கொடுத்து 8 விக்கெட் வீழ்த்தியதே அதிகபட்ச சாதனையாக இருக்கிறது. தற்போது 2வது இடத்தைப் பிடித்துள்ளார் அப்ரிதி. 98 ரன்களில் சுருண்ட மேற்கு இந்தியத் தீவுகள் முதலில் விளையாடிய பாகிஸ்தான் அப்ரிதி புண்ணியத்தால்50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 224 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய மேற்கு இந்தியத் தீவுகள் அணி, அப்ரிதியின் அதிரடி பந்து வீச்சால் 98 ரன்களிலேயே சுருண்டு போனது. இதனால் 5 போட்டிள் கொண்ட தொடரில் 126 ரன்கள் வித்தியாசத்தில் முதல் போட்டியை வென்றது பாகிஸ்தான்.

 

நன்றி மக்களே... தனது வெற்றியை பாகிஸ்தான் ரசிகர்களுக்கு சமர்ப்பித்துள்ளார் அப்ரிதி. இதுகுறித்து அவர் கூறுகையில், என் நாட்டு மக்களுக்கும், ரசிகர்களுக்கும் அவர்கள் என் மீது வைத்த நம்பிக்கைக்காவும், ஆதரவுக்காகவும் நன்றி சொல்கிறேன். இதை அவர்களுக்குச் சமர்ப்பிக்கிறேன் என்றார் அப்ரிதி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்