முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்னோடன் எப்போது வெளியேறுவார்? அதிபர் புட்டீன் பதில்

செவ்வாய்க்கிழமை, 16 ஜூலை 2013      உலகம்
Image Unavailable

 

மாஸ்கோ,ஜூலை.17 - சந்தர்ப்பம் வரும்போது ரஷ்யாவில் இருந்து அமெரிக்க உளவாளி ஸ்னோடன் வெளியேறுவார் என்று அதிபர் புட்டீன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவை சேர்ந்த ஸ்னோடன் என்பவர் தன்னுடைய சொந்த நாட்டு ரகசியங்களை அம்பலப்படுத்தி உள்ளார். இதனால் அவரை கைது செய்ய அமெரிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார். ஆனால் ஸ்னோடன் தப்பியோடி ரஷ்யாவில் தஞ்சம் புகுந்துள்ளார். அவரை வெளியேற்றும்படி அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ளது. இந்தநிலையில் ரஷ்ய அதிபர் புட்டீன் நேற்று மாஸ்கோவில் உள்ள லெனின் சதுக்கத்தில் மாணவர்களிடையே புட்டீன் கலந்துரையாடல் நிகழ்த்தினார். அப்போது அவர் கூறுகையில் ஸ்னோடன் சந்தர்ப்பம் வரும்போது ரஷ்யாவில் இருந்து வெளியேறுவார். அவர் தென் அமெரிக்கா நாடுகளில் ஏதாவது ஒன்றில் தஞ்சம் அடையலாம். யாருடைய அழைப்புதழும் இல்லாமல் ரஷ்யாவில் ஸ்னோடன் தஞ்சம் புகுந்துள்ளார். அவர் அமெரிக்காவுக்கு செல்லவில்லை. இதர நாட்டுக்கு தற்காலிக விசா மூலம் வந்துள்ளார் என்று புட்டீன் தெரிவித்தார். 

ஸ்னோடன் விசாவை அமெரிக்க ரத்து செய்த பிறகு அவர் பயணம் செய்ய முடியாமல் தடுக்கப்பட்டுள்ளார். ஸ்னோடன் எதிர்காலம் குறித்தோ வாழ்க்கை குறித்தோ நான் எதுவும் கூற முடியாது. அதேசமயத்தில் ஏதோ ஒரு நாட்டில் நிரந்தரமாக குடியேற ஸ்னோடன் விரும்புகிறார். சந்தர்ப்பம் வரும்போது அதை ஸ்னோடன் மேற்கொள்வார் என்றும் புட்டீன் மேலும் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்