முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்பெக்ட்ரம் ஊழல் - விதிவிலக்கு அளிக்கப்படாது - சுப்ரீம் கோர்ட்டு

வெள்ளிக்கிழமை, 6 மே 2011      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி,மே.6 - 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட மாட்டாது என்று சுப்ரீம்கோர்ட்டு கண்டிப்புடன் கூறியுள்ளது. ரூ.1.76 லட்சம் கோடி 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் வருவாய் இழப்பு தொடர்பாக அறிக்கை ஒன்றை வருமாவரித்துறை சார்பாக சுப்ரீம்கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை ஆய்வு செய்த நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, ஏ.கே.கங்குலி ஆகியோர் கொண்ட பெஞ்ச் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளது. அறிக்கையில் கூறப்பட்டுள்ள இழப்பு தொகை எவ்வளவு என்று வருமான வரித்துறை குறிப்பிட்டிருப்பதை பார்த்த எங்களுக்கு தலை சுற்றல் வந்துவிட்டது என்றும் இந்த தொகையில் உள்ள சைபர்களின் எண்ணிக்கையை இதுவரை நாங்கள் பார்த்ததே இல்லை என்றும் நீதிபதிகள் சிங்வியும் கங்குலியும் அதிர்ச்சியுடன் கூறினர். மேலும் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு ஒருபோதும் விதிவிலக்கு அளிக்கப்படமாட்டாது என்றும் நீதிபதிகள் கூறினர். அவர்கள் அனைவரும் கோர்ட்டில் ஆஜராக சம்மன் அனுப்பப்படும் என்றும் நீதிபதிகள் சூசமாக தெரிவித்தனர். 

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக வரி இழப்பு குறித்து மேலும் இரண்டு அறிக்கைகளை வருகின்ற 16-ம் தேதி சுப்ரீம்கோர்ட்டில் வருமான வரித்துறையினர் தாக்கல் செய்ய உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்