முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2-வது ஒரு நாள்: மே.இ.தீவு 37 ரன் வித்தியாசத்தில் வெற்றி

புதன்கிழமை, 17 ஜூலை 2013      விளையாட்டு
Image Unavailable

 

கயானா, ஜூலை. 18 - பாகிஸ்தான் அணிக்கு எதிராக கயா  னாவில் நடைபெற்ற 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் மே.இ.தீவு அணி 37 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் மே.இ.தீவு அணி தரப்பில், டேரன் பிராவோ மற்றும் டிவைன் பிராவோ இருவரும் அபார மாக பேட்டிங் செய்து அணிக்கு முன் னிலை பெற்றுத் தந்தனர். அவர்களுக்கு பக்கபலமாக சார்லஸ், சாமுவேல்ஸ் மற்றும் பொல்லார்டு ஆகியோர் ஆடி னர். 

பின்பு பெளலிங்கின் போது, இளம் சுழ ற் பந்து வீச்சாளரான சுனில் நரீன் சிறப் பாக பந்து வீசி 4 முக்கிய விக்கெட்டை க் கைப்பற்றினார். அவருக்கு ஆதரவா க, ரோச், சம்மி, சாமுவேல்ஸ், பொல் லார்டு மற்றும் டிவைன் பிராவோ ஆகி யோர் பந்து வீசி அணிக்கு வெற்றி தே டித் தந்தனர். 

மே.இ.தீவு  மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 2-வது ஒரு நாள் போட்டி கயானா தீவில் உள்ள பிராவிடென்ஸ் அரங்கத்தில் நடந்தது. 

இந்தப் போட்டியில் முதலில் களம் இறங்கிய மே.இ.தீவு அணி நிர்ணயிக்கப் பட்ட 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற் கு 232 ரன்னை எடுத்தது. 

மே.இ.தீவு அணி தரப்பில், டிவைன் பிராவோ அதிகபட்சமாக 81 பந்தில் 54 ரன் எடுத்தார். இதில் 6 பவுண்டரி அடக் கம். கேப்டன் டிவைன் பிராவோ 52 பந்தில் 43 ரன் எடுத்தார். இதில் 5 பவுண்டரி அடக்கம். தவிர, சார்லஸ் 31 ரன் னையும், சாமுவேல்ஸ் 21 ரன்னையும், பொல்லார்டு 30 ரன்னையும், சிம்மன் ஸ் 10 ரன்னையும் எடுத்தனர். 

பாகிஸ்தான் அணி சார்பில், சாகித் அப் ரிடி 29 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட்எடுத்தார். சயீத் அஜ்மல் 45 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். தவிர, மொகமது இர்பான், ஆசாத் அலி, ஆகி யோர் தலா 1 விக்கெட் எடுத்தனர். 

பாகிஸ்தான் அணி 233 ரன்னை எடுத் தால் வெற்றி பெறலாம் என்ற இலக் கை மே.இ.தீவு அணி வைத்தது. ஆனா ல் அடுத்து களம் இறங்கிய அந்த அணி 47.5 ஓவரில் அனைத்து விக்கெட்டையு ம் இழந்து 195 ரன்னில் சுருண்டது. 

இதனால் மே.இ.தீவு அணி இந்த 2-வது ஆட்டத்தில் 37 ரன் வித்தியாசத்தில் வெ ற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிக ள் கொண்ட இந்தத் தொடர் 1- 1 எஎன்ற கணக்கில் சமனானது. 

பாகிஸ்தான் அணி தரப்பில், துவக்க வீரர் நசீர் ஜாம்ஷெட் 93 பந்தில் 54 ரன் எடுத்தார். இதில் 4 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் அடக்கம். உமர் அக்மல் 46 பந்தி ல் 50 ரன் எடுத்தார். இதில் 5 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் அடக்கம். தவிர, மொ கமது ஹபீஸ் 20 ரன்னையும், அகமது ஷெஜாத் 19 ரன்னையும், கேப்டன் மிஸ் பா 17 ரன்னையும், ஆசாத் சபீக் 10 ரன் னையும் எடுத்தனர். 

மே.இ.தீவு அணி சார்பில் சுனில் நரீன் 26 ரன்னைக் கொடுத்து 4 விக்கெட்  எடு த்தார். தவிர, டிவைன் பிராவோ 2 விக் கெட்டும், ரோச், சம்மி, சாமுவேல்ஸ் மற்றும் பொல்லார்டு ஆகியோர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர். இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக சுனில் நரீன் தேர்வு செய்யப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்