முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டோர்ஜி காண்டூ உடக்கு பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி

வெள்ளிக்கிழமை, 6 மே 2011      இந்தியா
Image Unavailable

 

இதாநகர்,மே.6 - ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த அருணாசலப்பிரதேச மாநில முதல்வர் டோர்ஜி காண்டூ உடலை கண்டுபிடித்து எடுத்த பின்னர் தலைநகர் இதாநகருக்கு கொண்டுவரப்பட்டது. டோர்ஜி உடலுக்கு முக்கிய பிரமுகர்கள் உள்பட ஏராளமானோர் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். 

டோர்ஜி காண்டூ கடந்த சனிக்கிழமை அன்று மாநிலத்தின் புனித ஸ்தலமான தவாங்கில் இருந்து இதாநகருக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டார். அவருடன் விமானி உள்பட 4 பேர் வந்தனர். ஹெலிகாப்டர் புறப்பட்ட 20 நிமிடத்தில் விபத்துக்குள்ளானது. விமான நிலையத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த விமான நிலைய அதிகாரிகள் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது ஹெலிகாப்டர் பத்திரமாக தரையிறங்கியதாகவும் டோர்ஜி காண்டூ உள்பட அவருடன் சென்ற அனைவரும் பத்திரமாக இருப்பதாகவும் முதலில் கூறப்பட்டது. மறுநாள் டோர்ஜி காண்டு சென்ற ஹெலிகாப்டரை காணவில்லை என்றும் விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதனையொட்டி பாதுகாப்பு படையினரும் போலீசாரும் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். ஹெலிகாப்டர்கள், ராணுவ விமானங்கள் மூலமாகவும் தரைவழியாகவும் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். ஏறக்குறைய 3 நாட்கள் தேடியும் கிடைக்கவில்லை. நேற்றுமுன்தினம் தவாங் மாவட்டத்தில் உள்ள கெய்லா என்ற இடத்தில்  ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி அதன் பாகங்கள் சிதறிக்கிடப்பது தெரியவந்தது. இந்த இடம் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 4500 மீட்டர் உயரத்தில் உள்ளது.  மேலும் விபத்துக்குள்ளான இடத்தில் முதல்வர் டோர்ஜி காண்டூ உள்பட ஹெலிகாப்டரில் சென்ற அனைவரின் உடல்களும் கருகிய நிலையில் கிடந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. ராணுவ வீரர்கள் அந்த இடத்திற்கு சென்று விமானம் மூலம் தரையிறங்கினர்.  டோர்ஜி உள்பட விபத்தில் பலியான அனைவரின் உடல்களையும் ராணுவ வீரர்கள் எடுத்துக்கொண்டு சிறிதுதூரம் நடந்தே வந்தனர். பின்னர் ராணுவ ஹெலிகாப்டரில் ஏற்றப்பட்டு இதாநகருக்கு கொண்டுவரப்பட்டது. இதாநகரில்  உள்ள முதல்வர் அலுவலகத்தில் டோர்ஜி உடல் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. பின்னர் அங்குள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் உடல் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. பிரதமர் மன்மோகன் சிங் இன்று இதாநகருக்கு வந்து டோர்ஜி உடலுக்கு அஞ்சலி செலுத்துகிறார். அதுவரை டோர்ஜி உடல் அங்கேயே இருக்கும்.  மோசமான காலநிலை காரணமாக மலை மீது ஹெலிகாப்டர் மோதி விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அல்லது ஹெலிகாப்டரில் ஏதாவது கோளாறு காரணமாக விபத்துக்குள்ளானதா,விபத்தில் சதி எதுவும் உள்ளதா என்பது குறித்தும் விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பதாக தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்