முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஜினிகாந்துக்கு பயப்படும்படியாக எதுவும் இல்லை - ஐஸ்வர்யா

வெள்ளிக்கிழமை, 6 மே 2011      சினிமா
Image Unavailable

 

சென்னை, மே.6 -​ நடிகர் ரஜினிகாந்துக்கு வைரஸ் காய்ச்சல் மற்றும் இருமல் மட்டுமே இருப்பதாகவும், அதற்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், பயப்படும்படியாக அவருக்கு ஒன்றும் இல்லை என்றும் ராணா படப்பிடிப்பு திட்டமிட்டப்படி தொடர்ந்து நடைபெறும் என்றும் ரஜினியின் மூத்த மகளும், நடிகர் தனுஷ் மனைவியுமான ஐஸ்வர்யா கூறியுள்ளார்.இதுகுறித்த விபரம் வருமாறு:-

ரஜினிகாந்த் நடிக்கும் ராணா படப்பிடிப்பு கடந்த 29-ந்தேதி ஏ.வி.எம். ஸ்டூடியோவில் துவங்கியது. கதாநாயகியாக நடிக்கும் தீபிகா படுகோனோவும் இதில் பங்கேற்றார். அப்போது படப்பிடிப்பு குழுவினருடன் ரஜினி சிற்றுண்டி சாப்பிட்டார். இதில் அவருக்கு அஜீரண கோளாறு ஏற்பட்டது. போயஸ் கார்டனில் உள்ள வீட்டுக்கு திரும்பியதும் வாந்தி எடுத்தார். இதையடுத்து மயிலாப்nullரிலுள்ள இசபெல்லா ஆஸ்பத்திரியில் ரஜினியை அனுமதித்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அன்று மாலையே டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினார். 

டாக்டர்கள் ஓய்வு எடுக்கும்படி அறிவுறுத்தியதால் படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு 8.30 மணிக்கு ரஜினிக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக இசபெல்லா ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவசர சிகிச்சை பிரிவில் வைத்து டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். உடலில் நீnullர்ச்சத்து குறைந்ததாகவும் காய்ச்சல் அடிப்பதாகவும் கூறப்பட்டது. சர்க்கரை நோய் நிபுணர் டாக்டர் கிருஷ்ணசாமி, டாக்டர் கிஷோர் உள்ளிட் டோர் சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ரஜினிக்கு வைரஸ் காய்ச்சல் இருப்பதாகவும், 3 நாட்கள் ஓய்வு எடுக்கும்படியும் அறிவுறுத்தியுள்ளதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர். ரஜினி மனைவி லதா, மகள்கள் ஐஸ்வர்யா, சவுந் தர்யா உடன் இருந்து கவனித்து வருகிறார்கள். ரஜினி உடல்நிலை குறித்து அவரது மூத்த மகளும், நடிகர் தனுஷ் மனைவியுமான ஐஸ்வர்யா மருத்துவமனையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

என் தந்தை ரஜினிக்கு வைரஸ் காய்ச்சல் இருந்தது. வறட்டு இருமலும் ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மூச்சுத் திணறல் இல்லை. டாக்டர்களின் முழு கண்காணிப்பில் இருக்கிறார். பயப்படும்படி எதுவும் இல்லை. நன்றாக இருக்கிறார். பார்வையாளர்கள் சந்தித்தால் நோய் தொற்று ஏற்படும் என்பதற்காக அவசர சிகிச்சை பிரிவில் வைத்துள்ளோம். யாரும் பார்க்க அனுமதிக்கப்படவில்லை. முழு ஓய்வு தேவை என்று டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர். இதனால் ராணா படப்பிடிப்பு பாதிக்காது. ரத்து செய்யப்படவும் மாட்டாது. திட்டமிட்டபடி படப்பிடிப்பு நடைபெறும். 

இவ்வாறு ஐஸ்வர்யா தனுஷ் கூறினார். அவசர சிகிச்சை பிரிவு டாக்டர் கிஷோர் உடன் இருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்