முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வங்கதேசத்தில் திடீர் கலவரம்: துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலி

புதன்கிழமை, 17 ஜூலை 2013      உலகம்
Image Unavailable

 

நாகா, ஜூலை. 18 - வங்கதேச பிரிவினையின் போது நடைபெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பாக நீதிமன்ற விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. இந்த வழக்கில் ஜமாத் இ இஸ்லாமி தலைவரான 91 வயதான குலாம் ஆசாமுக்கு நீதிமன்றம் அறிவித்த மரண தண்டனையை குறைத்து அவரது வயதை கருத்தில் கொண்டு 90 ஆண்டுகள் ஆயுள் தண்டனையாக அறிவித்தது. 

அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை கண்டித்து ஜமாத் இ இஸ்லாமி கட்சியின் மாணவர் அணியினர் ஆயிரக்கணக்கானோர் முக்கிய நகரங்களில் போராட்டங்களில் ஈடுபட்டனர். அதில் பயங்கர வன்முறை வெடித்தது. சத்கிரா மாவட்டம் கலிகஞ்ச் நகரில் போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில்  15 வயது மாணவன் உட்பட 2 பேர் பலியாயினர். போலீசார் உட்பட 12 பேர் படுகாயமடைந்தனர். மேலும் காசிப்பூர் என்ற இடத்தில் வன்முறையில் சிறுமி ஒருத்தி பலியானார். தினாஜ்பூரில் கலவரத்துக்கு  ஒருவர் உயிரிழந்தார். வன்முறை சம்பவங்களால் அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்