மோடிக்காக பூரி ஜெகநாதரிடம் காங்கிரசார் வேண்டுதல்

வியாழக்கிழமை, 18 ஜூலை 2013      இந்தியா
Image Unavailable

 

பூரி, ஜூலை. 19 - குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு நல்ல புத்தி கொடுக்க வேண்டும் என்று பூரி ஜெகநாதர் கோயிலில் காங்கிரஸ் கட்சியினர் பிரார்த்தனை நடத்தியுள்ளனர்.குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அண்மையில் ஒடிசா மாநிலம் சென்று பூரி ஜெகநாதரை வழிபட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் ஒடிசாவும் குஜராத்தும் ஒன்று.. ஒடிசா மாநிலத்தவரால் குஜராத் வளர்ச்சி அடைந்தது என்று கூறினார்.

இதற்கு போட்டியாக ஒடிசா மாநில காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளரான ஹரிபிரசாத் நேற்று முன்தினம் பூரி ஜெகநாதர் கோயிலில் வழிபாடு நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாட்டை மத ரீதியாக பிளவுபடுத்தும் வகையில் பேசி வரும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு நல்ல புத்தியைக் கொடுக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்தேன். குஜராத்தில் வாழும் ஒடிசா மாநிலத்தவருக்கு எந்த ஒரு உதவியும் மோடி செய்யவில்லை. அவர்களுக்கு ரேசன் அட்டையோ வாக்காளர் அட்டையோ கொடுக்கப்படவில்லை என்றார் அவர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: