முக்கிய செய்திகள்

இன்று அட்சய திருதி - தங்கம் விலையில் சரிவு

Gold 0

மும்பை,மே.7 - இன்று அட்சய திருதி நாளாக இருந்தபோதிலும் தங்கத்தின் விலை குறைந்துள்ளது.க்கடந்த 3 நாட்களுக்கு முன்பு சுமார் ஒரு வார காலமாக தங்கம் விலை ஏறிக்கொண்டே இருந்தது. திருமண விழாக்கள் இல்லாத நேரத்திலேயே தங்கம் விலை ஏறிக்கொண்டே இருக்கிறதே என்று மக்கள் கவலைப்பட்டுக்கொண்டியிருந்தனர். இந்தநிலையில் கடந்த 3 நாட்களாக தங்கத்தின் விலை குறைந்து கொண்டே வருகிறது. அதுவும் இன்று அட்சய திருதியாகும்.வாங்கினாலும் சரி, வருடம் முழுவதும் தங்க நகைகள் வாங்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று மக்களிடையே நம்பிக்கை உள்ளது. அதனால் இன்று நகைக்கடைகளில் மக்கள் அலைமோதுவார்கள். அதனால் தங்கம் விலை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு மாறாக நேற்றுமுன்தினம் தங்கத்தின் விலையில் சுமார் 162 குறைந்தது. 10 கிராம் தங்கத்திற்கு ரூ.345 குறைந்துள்ளது. இதற்கு காரணம் தங்கம் சேமிப்பு வைத்திருப்பவர்கள் விற்பனைக்கு அதிக அளவு வெளியேற்றி இருப்பதுதான் என்று கூறப்படுகிறது. வெள்ளி விலையும் குறைந்துள்ளது.  எப்படியோ மக்களுக்கு ஆண்டவன் வழிகாட்டினால் போதும்.

இதை ஷேர் செய்திடுங்கள்: