காதலியை கரம்பிடித்தார் கிரிக்கெட் வீரர் மனோஜ்

வெள்ளிக்கிழமை, 19 ஜூலை 2013      விளையாட்டு
Image Unavailable

கொல்கத்தா, ஜூலை. 20 - இந்திய கிரிக்கெட் வீரரும், ஐ.பி.எல். வீரருமான மனோஜ் திவாரி, தனது காதலி சுஷ்மிதாராயை திருமணம் செய்துள்ளார். மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் மனோஜ் திவாரி. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக இவர் விளையாடி வருகிறார். இவருக்கும் இவரது காதலி சுஷ்மிதா ராய்க்கும் திருமணம் நடந்துள்ளது. ஹவுராவில் வைத்து காதலியை மணந்துள்ளார் திவாரி. கடந்த 6 வருடங்களாக இருவரும் காதலித்து வந்தனர். 27 வயதான திவாரி, 8 ஒரு நாள் போட்டிகளில் ஆடியுள்ளார். 3 டுவென்டி 20 போட்டிகளிலும் இந்தியாவுக்காக ஆடியுள்ளார். தற்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஐ.பி.எல். போட்டிகளில் ஆடி வருகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: