முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்சி மீது திருட்டு வழக்கு

வெள்ளிக்கிழமை, 19 ஜூலை 2013      உலகம்
Image Unavailable

கிரோவ், ஜூலை. 20 - ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவ்லனி, அரசு கிட்டங்கியிலிருந்து மரம் திருடி மாட்டி தற்போது குற்றவாளி என்று கோர்ட்டால் அறிவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு 6 வருட சிறைத் தண்டனை கிடைக்கும் வாய்ப்புள்ளது. இதன் காரணமாக அவரது மாஸ்கோ நகர மேயராகும் கனவும் தவிடுபொடியாகியுள்ளது. அலெக்ஸி மீது, கடந்த 2009ம் ஆண்டு அரசு கிட்டங்கியில் இருந்த 5 லட்சம் டாலர் மதிப்புள்ள மரங்களைத் திருடியதாக புகார் எழுந்தது. அப்போது அவர் மாகாண ஆளுநரின் ஆலோசகராக இருந்து வந்தார். இந்த வழக்கில் தற்போது நவ்லனி குற்றவாளி என்று கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. அவருக்கு 6 வருட சிறைத் தண்டனை கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் அவருக்கான தண்டனை விவரம் அறிவிக்கப்படும். மாஸ்கோ நகர மேயர் பதவிக்குப் போட்டியிடும் கனவில் இருந்து வந்தார் நவ்லனி. ஆனால் திருட்டு வழக்கில் அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளதால் அந்தக் கனவு தவிடுபொடியாகியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்