முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிளோரோ டென்னிஸ்: டிவிஜ் ஷரன் - புரவ் முன்னேற்றம்

ஞாயிற்றுக்கிழமை, 21 ஜூலை 2013      விளையாட்டு
Image Unavailable

 

கொலம்பியா, ஜூலை. 21 - கொலம்பியாவில் நடைபெற்று வரும் ஏ.டி.பி. கிளாரோ ஓபன் டென்னிஸ் போட்டியின் இரட்டையர் பிரிவு கால் இறுதியில், இந்தியாவின் டிவிஜ் ஷரண் மற்றும் புரவ் ராஜா ஜோடி வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறியது. 

ஆடவருக்கான ஏ.டி.பி. சுற்றுப் பயண ப் போட்டிகளில் ஒன்றான கிளாரோ ஓபன் டென்னிஸ் கொலம்பியாவில் கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. 

இந்தப் போட்டியில் சாம்பியன் பட்டத் தைக் கைப்பற்ற முன்னணி வீரர்கள் களம் இறங்கி உள்ளனர். இந்தப் போட்டி அரை இறுதிக் கட்டத்தை அடைந்து உள்ளது. 

முக்கிய போட்டிகளில் ஒன்றான இதில் பங்கேற்று வரும் முன்னணி வீரர்கள் தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களை மகிழ்வித்து வருகின்றனர். 

விறுவிறுப்பான கட்டத்தை அடைந்து ள்ள இந்தப் போட்டியின் மொத்த பரி சுத் தொகை 6,38,085 அமெரிக்க டாலர் களாகும். இந்தப் போட்டி டயர் - 2 வகையிலான போட்டியாகும். 

இதன் இரட்டையர் பிரிவு கால் இறுதிச் சுற்று ஒன்று நடந்தது. இதில் இந்தியா வின் டிவிஜ் ஷரண் மற்றும் புரவ் ரா ஜா ஜோடியும், அமெரிக்க மற்றும் கனடா இணையும் ஆடின. 

இதில் இந்திய ஜோடி அபாரமாக ஆடி, 3 -6, 6 -3, 10 -6 என்ற செட் கணக்கில் நிக்கோலஸ் மான்ரோ மற்றும் வாசக் பாஸ்பிசில் இணையை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது. 

அடுத்து நடக்க இருக்கும் அரை இறுதி யில் இந்திய ஜோடி கொலம்பியாவின் ஜூவான் செபாஸ்டியன் கெபால் மற் றும் ராபர்ட் பர்ரா இணையுடன் மோத உள்ளது. 

கொலம்பியாவைச் சேர்ந்த இணை முத ல் நிலை ஜோடியாகும். இந்தியாவின் டிவிஜ் மற்றும் ராஜா ஜோடி 4-ம் நிலை ஜோடியாகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago