பிரதமர் வேட்பாளர்: உத்தவ் தாக்கரே யோசனை

ஞாயிற்றுக்கிழமை, 21 ஜூலை 2013      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, ஜூலை. 21 - பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பிரதமர் பதவிக்கு நம்பகமான தலைவர்கள் உள்ளனர் என்று சிவசேனாவின் தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் ராஜ்நாத்சிங்குடன் இணைந்து பேட்டியளித்த உத்தவ் தாக்கரே கூறியதாவது, இந்த நாட்டுக்கு வலுவான அரசும், நம்பகமான தலைவரும்தான் தேவை. ஆனால் இப்போதுள்ள சூழ்நிலையில் எனது மனதில் அப்படி ஒரு தலைவர் இருப்பதாக தோன்றவில்லை. பிரதமர் பதவிக்கு இந்தியாவில் பல நம்பகமான தலைவர்கள் உள்ளனர். அப்பதவிக்கு தேசிய ஜனநாயக கூட்டணியின் முகம் யார் என்பதை உரிய நேரத்தில் முடிவு செய்வோம் என்றார் அவர். நரேந்திர மோடியை எதிர்க்கும் விதமாகவே உத்தவ் தாக்கரே இவ்வாறு கருத்து தெரிவித்திருக்கிறார் என்கின்றனர் மோடியின் ஆதரவாளர்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்: