முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சர்வதேச போர் விதிமுறைகள் மீறப்படவில்லை - அமெரிக்கா

வெள்ளிக்கிழமை, 6 மே 2011      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன்,மே.6 - பின்லேடனை கொன்ற விவகாரத்தில் சர்வதேச போர் விதிமுறைகள் எதுவும் மீறப்படவில்லை என்று அமெரிக்கா விளக்கம் அளித்துள்ளது. அமெரிக்காவால் கடந்த 10 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த சர்வதேச தீவிரவாதி ஒசாமா பின்லேடன் இரண்டு தினங்களுக்கு முன்பு அமெரிக்க படையினரால் கொல்லப்பட்டார். பாகிஸ்தானில் ராணுவ அகாடமி அருகே கட்டப்பட்டிருந்த சொகுசு பங்களாவில் பதுங்கியிருந்த அவனை அமெரிக்க ராணுவ வீரர்கள் சுட்டுக்கொன்றனர். ஆனால் இந்த செயல் சட்டவிரோதம் என்று கூறுகிறது பாகிஸ்தான். இதற்கு அமெரிக்கா பதிலடி கொடுத்துள்ளது. 

இதுகுறித்து வாஷிங்டன்னில் நேற்று நாட்டின் செய்தி தொடர்பாளர் ஒருவர் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பின்லேடனை கொன்றதில் சர்வதேச போர் விதிமுறைகள் எதுவும் மீறப்படவில்லை. கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி நடந்த தாக்குதலுக்கு பிறகும் பின்லேடன் பல சதித்திட்டங்களை தீட்டினான். அவனை உயிரோடு பிடிக்கவே திட்டமிட்டோம். சரணடைய மறுத்ததால்தான் அவனை சுட்டுக்கொன்றோம். ஆகவே அபோடாபாத்தில் நடந்த சம்பவத்தில் சர்வதேச விதிமுறைகள் மீறப்படவில்லை. அவன் சரணடைந்திருந்தால் நீதியின் முன் நிறுத்தி தண்டனை கொடுத்திருப்போம். மேலும் இந்த சம்பவத்தில் பொதுமக்கள் யாரும் உயிர் இழக்கவில்லை. எனவே விதிமீறல் என்ற பேச்சுக்கே இடமில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்