கோதாவரி வெள்ளம்: 1300 பேர் முகாமுக்கு மாற்றம்

திங்கட்கிழமை, 22 ஜூலை 2013      இந்தியா
Image Unavailable

 

ராஜமுந்திரி, ஜூலை.22 - கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள தவுலேஸ்வரம் பாலத்தில் வெள்ளம் அபாய குறியீட்டை தாண்டிச் செல்வதால் அங்கிருந்த 1300 பேர் பாதுகாப்பாக மறுவாழ்வு முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இங்கு 2-வது முறையாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். வெள்ளம் பாதித்த பகுதிகளை மாவட்ட கலெக்டர் நீதுகுமார் மற்றும் மாவட்ட அதிகாரிகள் பார்வையிட்டனர். மேலும் பாலம், சாலைகள் சேதம் ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை அவர்கள் மேற்கொண்டனர்.

நீர்ப் பிடிப்பு பகுதிகளில் பலத்த மழையால் கோதாவரியில் வெள்ளம்  பெருக்கெடுத்து ஓடுவதால் 17 லட்சம் கன அடி தண்ணீர் கடலுக்கு திறந்து விடப்பட்டுள்ளது. வெள்ளம் வருவதை நாங்கள்  தீவிரமாகக் கண்காணித்து வருகிறோம். அதுதொடர்பாக பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். 

கோதாவரியிலும், அதன் கிளை நதிகளான கவுசமி, வசிதா உள்ளிட்ட பல ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: