முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரோலர் கோஸ்டரில் இருந்து தவறி விழுந்த பெண் பலி

திங்கட்கிழமை, 22 ஜூலை 2013      உலகம்
Image Unavailable

 

லாஸ் ஏஞ்சல்ஸ்,ஜூலை.23 - அமெரிக்காவில் பொழுது போக்கு பூங்காவில் ராட்சச ராட்டினத்தில் இருந்து எதிர்பாராதவிதமாக கீழே விழுந்த பெண் பரிதாபமாக பலியானார். அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் அர்லிங்டன் பகுதியில் பொழுதுப்போக்கு பூங்கா ஒன்று உள்ளது. அதில் பல்வேறு ராட்டினங்கள் மக்களை மகிழ்விப்பதற்காக உள்ளனர்.

கடந்த வெள்ளியன்று, ரோசி என்ற பெண்மணி தனது குடும்பத்தினருடன் அந்த கேளிக்கை பூங்காவிற்கு சென்றிருந்தார். தன் மகனோடு ரோலர்கோஸ்ட்டில் ஏறியுள்ளார் ரோசி. ராட்டினம் சரியாக 14 மாடி உயரத்திற்குச் சென்றபோது, சரியாக பாதுகாப்பு கம்பிகள் பொருத்தப்படாத காரணத்தால், ராட்டினத்தில் இருந்து தவறி விழுந்தார் ரோசி.

இதில் படுகாயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பலியானார். ராட்சச ராட்டினத்தில் இருந்து பெண் ஒருவர் தவறி விழுந்து பலியான சம்பவம் கேட்டு கேளிக்கை பூங்காவிற்கு வந்திருந்த அனைவரும் சோகத்ஹ்டில் மூழ்கினர். விபத்துக் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago