முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீரில் அமைதி திரும்பியது

செவ்வாய்க்கிழமை, 23 ஜூலை 2013      இந்தியா
Image Unavailable

 

ஸ்ரீநகர், ஜூலை. 24 - காஷ்மீரில் மூன்று நாட்களுக்கு பிறகு அமைதி திரும்பியது. காஷ்மீர் மாநிலம் ராம்பன் மாவட்டத்தில் கடந்த ஜூலை 18 ம் தேதி எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் தங்கியிருந்த முகாமை அப்பகுதியை சேர்ந்த 800 க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டதால் பதட்டம் ஏற்பட்டது. இதையடுத்து போலீசாரும், பி.எஸ்.எப். வீரர்களும் துப்பாக்கி சூடு நடத்தியதில் 4 பேர் கொல்லப்பட்டனர். இதனால் கடந்த 3 நாட்களாக பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பல இடங்களில் நிகழ்ந்த வன்முறையில் 200 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். கடைகள், வர்த்தக நிறுவனங்கள், அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் அடைக்கப்பட்டிருந்தன. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. 

மேலும் ஹூரியத் மாநாட்டு கட்சி விடுத்திருந்த மூன்று நாள் வேலை நிறுத்த போராட்டத்தால் ஸ்ரீநகர் பட்காம், சுந்தர்பாய், பந்தியோரா உள்ளிட்ட மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவு தளர்த்தப்பட்டதால் நிலைமை ஓரளவு சீரடைந்தது. நேற்று முன்தினம் நிலைமை முழுவதுமாக இயல்பு நிலைக்கு திரும்பியதால் அனைத்து பகுதிகளிலும் கடைகள் வர்த்தக நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டன. வாகன போக்குவரத்து தொடங்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சுந்தர்பால் நகரத்தில் போராட்டம் நடைபெற்றதால் அங்கு மட்டும் இயல்பு நிலை பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago