முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பின்லேடன் ஒரு கொலைகாரன் - ஹிலாரி கிளிண்டன்

வெள்ளிக்கிழமை, 6 மே 2011      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன்,மே.6 - சுட்டுக் கொல்லப்பட்ட சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லேடன் ஒரு தியாகி அல்ல, அவன் ஒரு கொலைகாரன் என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் கூறியுள்ளார். கடந்த 10 ஆண்டு காலமாக அமெரிக்காவால் தேடப்பட்டு வந்தவன் பயங்கரவாதி ஒசாமா பின்லேடன். அவனது கதையை 2 தினங்களுக்கு முன்பு முடித்து வைத்திருக்கிறது அமெரிக்கா. பாகிஸ்தானில் ராணுவ அகாடமி அருகே சொகுசு பங்களாவில் பதுங்கியிருந்த ஒசாமா பின்லேடனை அமெரிக்க படையினர் சுட்டுக் கொன்றனர். சரணடையும் படி அவனிடம் அமெரிக்க வீரர்கள் கேட்டதாகவும், ஆனால் அதற்கு பின்லேடன் மறுத்ததால் அதன் பின்னரே சுட்டுக் கொன்றதாகவும் அமெரிக்க தகவல்கள் கூறுகின்றன. மற்றபடி பொதுமக்கள் யாருக்கும் இதில் பாதிப்பில்லை என்றும் அமெரிக்கா விளக்கமளித்துள்ளது. 

இந்த நிலையில் வாஷிங்டனில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் கூறுகையில், பின்லேடன் ஒன்றும் தியாகி அல்ல. அவன் ஒரு கொலைகாரன் என்றும் கோபத்தோடு கூறினார். இதை மக்களுக்கு உணர்த்தும் வகையில் அறிக்கை ஒன்று வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார். இஸ்லாமியர்களையே கொன்று குவித்தவன் பின்லேடன் என்றும் ஹிலாரி கிளிண்டன் கூறினார். 

ஆனால் பாகிஸ்தானில் இன்னமும் பின்லேடனுக்கு ஆதரவு இருக்கத்தான் செய்கிறது. அவனது சாவிற்காக அங்குள்ள மக்களில் சிலர் கண்ணீர் விடுவதை தொலைக்காட்சிகள் ஒளிபரப்பி உள்ளன. அதே நேரத்தில் பின்லேடன் கொல்லப்பட்டதால் அமெரிக்க மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அவர்கள் இந்த வெற்றியை கொண்டாடி வருகிறார்கள். பின்லேடனின் மரணம் அமெரிக்காவை ஒருங்கிணைத்துள்ளது என்று ஒபாமாவும் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்