கர்நாடகாவில் குளத்தில் பேருந்து கவிழ்ந்து 15 பேர் பலி

செவ்வாய்க்கிழமை, 23 ஜூலை 2013      இந்தியா
Image Unavailable

பெங்களூர், ஜூலை. 24 - கர்நாடகா மாநிலத்தில் குளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இதுவரை 15 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கர்நாடகா மாநிலம் ஹசன் மாவட்டத்தின் பேலூரில் 50 க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற பேருந்து விஷ்ணுசமுத்திர குளத்தில் கவிழ்ந்தது. பேருந்தில் பயணம் செய்தவர்களில் அனைவரும் குளத்தில் மூழ்கினர். எந்திரம் மூலம் மூழ்கியவர்களை மீட்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பேருந்தில் பயணம் செய்தவர்களில் 15 பேர் குளத்தில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். அவர்களது உடல் மீட்கப்பட்டுள்ளது. கிரேன் உதவியுடன் பேருந்தை மீட்கும் பணியும் எஞ்சிய பயணிகளை மீட்கும் பணியும் நடைபெற்றுவருகிறது. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்: