முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒரு நாள் தொடர்: ஜிம்பாப்வே - இந்தியா இன்று மோதல்

செவ்வாய்க்கிழமை, 23 ஜூலை 2013      விளையாட்டு
Image Unavailable

 

ஹராரே, ஜூலை. 24 - ஜிம்பாப்வே மற்றும் இந்திய அணிகளு க்கு இடையேயான முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று ஹராரே நக ரில் துவங்குகிறது. கேப்டன் விராட் கோக்லி தலைமையி லான இந்திய அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு கேப்ட ன் பிரண்டன் டெய்லர் தலைமையிலா  ன அணிக்கு எதிராக விளையாட இருக் கிறது.

ஜிம்பாப்வே மற்றும் இந்திய அணிக ளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடத்த திட்டமிட ப்பட்டு உள்ளது. இதன் முதல் போட்டி ஹராரே நகரில் இன்று மதியம் துவங் குகிறது. 

இந்திய அணியில் கேப்டன் தோனி மற்றும் முன்னணி வேகப் பந்து வீச்சா ளர்களான இஷாந்த் சர்மா, புவனேஷ் வர் குமார், உமேஷ் யாதவ் மற்றும் அஸ்வின் ஆகியோருக்கு இந்தத் தொட ரில் ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளது. 

இதனால் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது. ஷமி அகமது மற்றும் மொகித் சர்மா ஆகிய வேகப் பந்து வீச்சாளர்கள் இடம் பெற்று உள்ளனர். 

தவிர, ஜம்மு - காஷ்மீரைச் சேர்ந்த ஆல் ரவுண்டர் ரசூலும் இந்தப் போட்டியில் அறிமுகம் ஆகிறார். அவர் பங்கேற்கும் முதல் சர்வதேசப் போட்டி இதுவாகும். 

மேலும், வினய் குமார், மற்றும் ஜெய்தேவ் உனாட்கட் ஆகிய வீரர்களும் இட ம் பெற்று உள்ளனர். 

அஸ்வின் இடம் பெறாத பட்சத்தில்,  அமித் மிஸ்ராவுடன் இணைந்து பர்வீஸ் ரசூல் மற்றும் ஜடேஜா ஆகியோர்  சுழ ற் பந்துகளை வீச தயாராக இருக்கின்றனர். 

கேப்டன் தோனிக்கு பதிலாக திணேஷ் கார்த்திக் விக்கெட் கீப்பிங் பணியை ஆற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தவிர, அவர் மிடில் ஆர்டரிலும் பேட்டிங் செய்யும் திறமை உடையவர். 

இந்திய அணியின் பேட்டிங்கில் ரோகி த் சர்மா, ஷிகார் தவான், விராட் கோக் லி, சுரேஷ் ரெய்னா, கார்த்திக் மற்றும் ஜடேஜா ஆகியோர் பிரகாசிக்க காத்தி ருக்கின்றனர். 

கடந்த சில போட்டிகளில் இந்திய அ  ணியின் துவக்க வீரர்களான ரோகித் சர்மா மற்றும் ஷிகார் தவான் இருவரு ம் சிறப்பாக செயல்பட்டனர். அவர்களது சராசரி 57.72 ஆகும். இருவரும் இணைந்து 3 முறை சதம் அடித்து உள்ளனர். 

சேத்தேஷ்வர் புஜாரா மிடில் ஆர்டரில் தனது திறனை வெளிப்படுத்த ஆயத்த மாக இருக்கிறார். அவருக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாகும். 

கடந்த 2 வருடங்களுக்கு முன்பு இந்திய அணி கேப்டன் சுரேஷ் ரெய்னா தலை மையில் ஜிம்பாப்வே முத்தரப்பு ஒரு நாள் தொடரில் பங்கு கொண்டு ஆடி யது. 

இதில் 2 லீக் ஆட்டத்தில் இந்திய அணி ஜிம்பாப்வேயிடம் தோல்வி அடைந்த து. இது ரெய்னாவிற்கு கிடைத்த அடி யாகும். அந்தப் போட்டியில் 3 -வது அணியாக இலங்கை பங்கேற்றது. 

இந்தத் தொடர் விராட் கோக்லிக்கு சவாலான தொடராகும். இளம் வீரர்க ளைக் கொண்ட இந்திய அணியை வை த்து அவர் வெற்றி பெற வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. 

ஜிம்பாப்வே அணியில் நட்சத்திர வீரர் கள் யாரும் இடம் பெறவில்லை. கேப் டன் பிரண்டன் டெய்லர் ஒருவர் மட்டு ம் இருக்கிறார். அவர் அனுபவம் பெற்ற வீரராவார். 37 வயதான அவர் இந்தத் தொடருடன் விடைபெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்திய அணிக்கு எதிராக அவர் நல்ல சாதனையை வைத்து இருக்கிறார். 4 ஒரு நாள் போட்டியில் ஆடியுள்ள அவ ர் 186 ரன்னை எடுத்து இருக்கிறார். இத ன் சராசரி 46 ஆகும். 

ஜிம்பாப்வே அணியில் கைல் ஜார்வி ஸ், பிரையன் விட்டோரி, எல்டன் சிகு ம்புரா, டெண்டாய் சதாரா ஆகிய 4 அனுபவம் வாய்ந்த வேகப் பந்து வீச் சாளர்கள் இடம் பெற்று உள்ளனர். தவி ர, மைக்கேல் சின்னோயா அறிமுகம் ஆகிறார். 

ஜிம்பாப்வேயும், இந்திய அணியும் இதுவரை 51 முறை மோதியுள்ளன. இதில் 41 ஆட்டத்தில் இந்தியாவும் 10 ல் ஜிம்பாப்வேயும் வெற்றி பெற்று உள்ளன. 

ஜிம்பாப்வே மற்றும் இந்திய அணிக ளுக்கு இடையேயான முதல் போட்டி ஹராரே நகரில் இந்திய நேரப்படி மதி யம் 12.30 மணிக்கு துவங்குகிறது. 

இந்திய அணி :-  விராட் கோக்லி (கேப் டன்), ரோகித் சர்மா, ஷிகார் தவான், சேத்தேஷ்வர் புஜாரா, திணேஷ் கார்த் திக், சுரேஷ் ரெய்னா, அம்பாதி ராயுடு, அஜிங்கியா ரகானே, ரவீந்திர ஜடேஜா, அமித் மிஸ்ரா, பர்வீஸ் ரசூல், ஷமி அக மது, மொகித் சர்மா,வினய் குமார் மற் றும் ஜெய்தேவ் உனாட்கட் ஆகியோர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago