பீகார் சம்பவம்: தலைமறைவாக தலைமை ஆசிரியை கைது

புதன்கிழமை, 24 ஜூலை 2013      இந்தியா
Image Unavailable

பாட்னா,ஜூலை.25 - பீகாரில் 23 மாணவர்கள் பலியான துயர சம்பவத்தில் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியை நேற்று கைது செய்யப்பட்டார். பீகார் மாநிலத்தில் சரண்மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் மதிய உணவு சாப்பிட்ட 23 பள்ளிக்குழந்தைகள் பலியானது தெரிந்ததே. இதுதொடர்பாக விசாரணை நடத்திய விசாரணை குழுவினர் இந்த சம்பவத்திற்கு பள்ளி தலைமை ஆசிரியையின் பொறுப்பற்ற செயலே காரணம் என்று கூறியிருந்தனர். மேலும் மதிய உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்திருப்பதை தடவியல் நிபுணர்களும் உறுதிப்படுத்தினர். இந்தநிலையில் பள்ளி தலைமை ஆசிரியை மீனா தேவி தலைமறைவாக இருந்தார். இந்த சம்பவம் நடந்த 8 நாட்களுக்கு பிறகு போலீசார் தலைமறைவாக இருந்த அந்த தலைமை ஆசிரியையை கைது செய்தனர். அவரிடம் தற்போது போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சாப்ரா நகரில் அவரை கைது செய்தோம் என்று சரண் மாவட்ட போலீஸ் அதிகாரி நிருபர்களிடம் தெரிவித்தார். மீனா தேவி கைது செய்யப்பட்டதை பீகார் முதல்வர் நிதீஷ்குமாரும் உறுதிப்படுத்தியுள்ளார். தற்போது மீனாதேவியிடம் விசாரணை நடந்து வருகிறது. அவர் தற்போது போலீஸ் காவலில் உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: