முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒரு நாள்: இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

புதன்கிழமை, 24 ஜூலை 2013      விளையாட்டு
Image Unavailable

 

ஹராரே, ஜூலை. 25 - ஜிம்பாப்வே அணிக்கு எதிராக ஹரா ரேயில் நடைபெற்ற முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிக ளுக்கு இடையேயான முதல் ஒரு நாள் போட்டி ஹராரே விளையாட்டு அரங் கத்தில் நேற்று நடைபெற்றது. 

இந்தப் போட்டியில் முதலில் ஆடிய ஜிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 228 ரன்னை எடுத்தது. அந்த அணி தரப்பில் 2 வீரர்கள் சிறப்பாக பேட்டிங் செய்து அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தனர். 

துவக்க வீரர் சிக்கந்தர் ரஜா அதிகபட்ச

மாக, 112 பந்தில் 82 ரன்னை எடுத்தார். இதில் 6 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் அட க்கம். சிகும்புரா மின்னல் வேகத்தில் ஆடி 34 பந்தில் 43 ரன் எடுத்தார். இதில் 6 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் அடக்கம். தவிர, சிபாண்டா 72 பந்தில் 34 ரன்னையும், வில்லியம்ஸ் 15 ரன்னையும், கேப் டன் டெய்லர் 12 ரன்னையும் எடுத்தனர். 

இந்திய அணி 229 ரன்னை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்கை ஜிம் பாப்வே அணி வைத்தது. அடுத்து களம் இறங்கிய அந்த அணி 44.5 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 230 ரன்னை எடுத் தது. 

இதனால் இந்த முதல் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொட ரில் 1 - 0 என்ற கணக்கில் முன்னிலை பெற்று உள்ளது. 

இந்திய அணி தரப்பில் கேப்டன் விரா  ட் கோக்லி சதம் அடித்தது ஆட்டத்தின் சிறப்பம்சமாகும். அவர் 108 பந்தில் 115 ரன்னை எடுத்தார். இதில் 13 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் அடக்கம். 

அவருக்குப் பக்கபலமாக ஆடிய அம் பாதி ராயுடு 84 பந்தில் 64 ரன்னை எடுத் து இறுதிவரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். இதில் 4 பவுண்டரி அடக்க ம். தவிர, ரோகித் சர்மா 20 ரன்னையும், ஷிகார் தவான் 17 ரன்னையும் எடுத்தனர். இந்தப் போட்டியின் ஆட்டநாயக னாக கோக்லி தேர்வு செய்யப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்