சிஏஜி தலைவர் நியமனம்: மத்திய அரசுக்கு நோட்டீஸ்

புதன்கிழமை, 24 ஜூலை 2013      அரசியல்
Image Unavailable

 

புதுடெல்லி,ஜூலை,25 - மத்திய தலைமை கணக்கு தணிக்கையாளராக ஷசி காந்த் சர்மா நியமிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்டுள்ள 2 வழக்குகளில் பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு டெல்லி ஐகோர்ட்டு நோட்டீசு அனுப்பி உள்ளது. மத்திய தலைமை கணக்கு தணிக்கையாளராக ஷசி காந்த் சர்மாவை மத்திய அரசு நியமித்தது. இவர் ராணுவ செயலாளராக பணியாற்றியவர். அப்போது ராணுவ கொள்முதல் செய்வது தொடர்பாக எழுந்த சர்ச்சைகளில் சர்மா சிக்கியுள்ளார். அதனால் அவர் நியமனத்தை ரத்து செய்யக்கோரி டெல்லி ஐகோர்ட்டில் 2 பேர் தனித்தனியாக பொதுநல வழக்குகளை தொடர்ந்துள்ளனர். இந்த வழக்குகளை விசாரணைக்கு ஐகோர்ட்டு டிவிஷன் பெஞ்ச் நீதிபதிகள் பி.டி.அகமத், விபு பஹ்ரு ஆகியோர் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டனர். இதனையொட்டி மத்திய அரசு வரும் ஆகஸ்டு மாதம் 8-ம் தேதிக்குள் பதில் அளிக்கும்படி நோட்டீசு அனுப்பி உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: