மும்பையில் பலத்த மழை: வீட்டுக்குள் இருக்க உத்தரவு

புதன்கிழமை, 24 ஜூலை 2013      இந்தியா
Image Unavailable

 

மும்பை, ஜூலை. 25 - மராட்டிய மாநிலம் முழுவதும் கடந்த சில தினங்களாக பருவ மழை தீவிரமாக பெய்து வருகிறது. மும்பை மற்றும் மும்பை புறநகர் பகுதியிலும் நல்ல மழை பெய்தபடி உள்ளது. இந்த நிலையில் மும்பை மற்றும் புறநகரில் பலத்த காற்றுடன் மிக பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்ததை தொடர்ந்து மும்பையில் பெரும்பாலான பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. 

பொதுமக்கள் நேற்று பிற்பகல் வெளியில் வராமல் வீடுகளுக்குள் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பலத்த மழை பெய்யும் பட்சத்தில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மீட்பு பணிகளை உடனுக்குடன் செய்ய மும்பை மாநகராட்சி அதிகாரிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். மும்பையில் அடுத்த 3 நாட்களுக்கு மிக பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்: