முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மோடிக்கு விசா: மோசடி கையெழுத்து போடவில்லை என மறுப்பு

வியாழக்கிழமை, 25 ஜூலை 2013      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, ஜூலை. 26 - குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு கோத்ரா கலவரத்தை காரணம் காட்டி 2002 ம் ஆண்டு முதல் அமெரிக்கா விசா கொடுக்க மறுத்து வருகிறது. இந்த நிலையில் குஜராத் மாநில சட்டசபை தேர்தலில் மோடி அமோகமாக வெற்றி பெற்றதாலும் மற்றும் பா.ஜ.க. பிரதமர் வேட்பாளராக அவர் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாலும் அமெரிக்காவின் நிலையில் மாற்றம் ஏற்பட தொடங்கியுள்ளது. 

நரேந்திர மோடிக்கு விசா வழங்க அமெரிக்க அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் மோடிக்கு எப்படியாவது அமெரிக்க விசா பெற்று விட வேண்டும் என பா.ஜ.க. மூத்த தலைவர்கள் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக அவர்கள் அமெரிக்க உயரதிகாரிகளிடம் பேசி வருகிறார்கள். இந்த நிலையில் மோடிக்கு விசா வழங்க கூடாது என்று வலியுறுத்தி இந்திய எம்.பி.க்கள் 65 பேர் கையெழுத்திட்டதாக கூறப்படும் ஒரு கடிதம் அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் அந்த கடிதம் ஒரு மோசடி கடிதம் என்று இப்போது தெரியவந்துள்ளது. 

அமெரிக்க விசா கிடைத்து விட்டால் மோடியின் இமேஜ் உயர்ந்து விடும் என்ற பயத்தில் அந்த கடிதம் எம்.பி.க்களின் கையெழுத்து பெறாமலேயே தயாரிக்கப்பட்டிருப்பது அம்பலமாகி உள்ளது. இந்நிலையில் சுமார் பல்வேறு கட்சிகளை சேர்ந்த 12 எம்.பி.க்கள் தாங்கள் கையெழுத்திடவில்லை என மறுப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. மோடிக்கு எதிராக நடந்துள்ள இந்த சதி பா.ஜ.க. தலைவர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதை தொடர்ந்து பா.ஜ.க. சார்பில் சபாநாயகர் மீராகுமாருக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில் இந்த மோசடியில் ஈடுபட்டவர்களை கண்டுபிடித்து கடுமையாக தண்டிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த விவகாரத்தில் மத்திய அரசும், காங்கிரஸ் மூத்த தலைவர்களும் எந்த கருத்தும் சொல்லாமலே மவுனம் காத்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்