முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உள்கட்டமைப்பு வசதிகளை செய்து தருவதில் காங்., தோல்வி

வியாழக்கிழமை, 25 ஜூலை 2013      இந்தியா
Image Unavailable

 

கோவை, ஜூலை. 26 - அனைத்து தரப்பு மக்களுக்கு வேண்டிய உள்கட்டமைப்பு வசதிகளை செய்து தருவதில் காங்கிரஸ் அரசு தோல்வி கண்டுள்ளதாக பாரதீய ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளர் பிரகாஷ் ஜவ்டேகர் கோவையில் தெரிவித்தார். சேலத்தில் பாரதீய ஜனதா கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் கொலை செய்யப்பட்டதை அடுத்து தமிழகத்தில் நிலவும் சூழல் குறித்த உண்மை நிலையை கண்டறிய அக்கட்சியின் அகில இந்திய செய்தி தொடர்பாளர்கள் பிரகாஷ் ஜவ்டேகர், நிர்மலா சீதாராமன், நாடாளுமன்ற உறுப்பினர் அனந்த்குமார் ஹெக்டே ஆகியோரடங்கிய மத்திய மூவர் குழு அமைக்கப்பட்டது. அக்குழுவினர் கோவை வந்தனர்.

தங்கள் வருகை குறித்து பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் பிரகாஷ் ஜவ்டேகர் கூறுகையில், 

பா.ஜ.க. மாநில பொதுச் செயலாளர் ரமேஷ் கடந்த வாரம் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்தும் கடந்த சில மாதங்களில் இங்குள்ள பா.ஜ.க. மற்றும் சங்க பரிவார் அமைப்புகளின் இந்து இயக்க தலைவர்கள் நிர்வாகிகள் மீதான தாக்குதல் கொலை சம்பவங்கள், வழக்குகள் குறித்தும் விசாரித்து அறிக்கை அளிக்க பா.ஜ.க. வின் தேசிய தலைவர் ராஜ்நாத்சிங் குழுவை அமைத்துள்ளார். 

சென்னை, கோவை, சேலம், வேலூர் ஆகிய இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மையங்களில் கட்சியினருக்கு உள்ள பாதுகாப்புகள் அச்சுறுத்தல் பிரச்சினைகள் குறித்து விசாரித்து அவற்றை இங்குள்ள தலைவர்களுடன் கலந்தாலோசித்த பிறகு அவை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என்றார். 

குஜராத் முதல்வர் நரேந்திரமோடிக்கு விசா வழங்க கூடாது என்று அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடிதம் எழுதியுள்ளது குறித்து கேட்ட போது இக்குற்றச்சாட்டு பொய்யானது. கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளதாக கூறப்படும் 65 எம்.பி.க்களில் 30 பேர் தாங்கள் அதில் கையெழுத்திடவில்லை என்று தெரிவித்துள்ளனர். இதிலிருந்தே தெரிகிறது இது ஒரு மோசடி என்பது. மோடிக்கு எதிராக காங்கிரஸ் செய்யும் சதிகளில் இதுவும் ஒன்று என்றார். 

நாட்டில் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் வேண்டிய உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி தருவதில் காங்கிரஸ் ரசு தோல்வி கண்டுள்ளது. பிரதமராக வாஜ்பாய் இருந்த போது அனைத்து துறைகளிலும் வளர்ச்சி ஏற்பட்டது. கடந்த 10 ஆண்டுகளில் அந்நிலை முற்றிலுமாக மாறி விட்டது என்றும் அவர் தெரிவித்தார். மூவர் குழுவினருடன் பா.ஜ.க.வின் தமிழ்நாடு மாநில தலைவர் பொன். ராதாகிருஷ்ணனும் இருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago