முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மே.இ.தீவுக்கு எதிரான போட்டி: பாக்., தொடரை கைப்பற்றியது

வியாழக்கிழமை, 25 ஜூலை 2013      விளையாட்டு
Image Unavailable

 

கிராஸ் இஸ்லெட், ஜூலை. 26 - மே.இ. தீவு அணிக்கு எதிராக கிராஸ் இஸ்லெட் நகரில் நடைபெற்ற 5-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட் வித்தி யாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை  3 -1 என்ற கணக்கில் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. 

இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி தரப்பில், கேப்டன் மிஸ்பா உல் ஹக் மற்றும் அகமது ஷெர்ஜாத் இருவ ரும் அபாரமாக பேட்டிங் செய்து அரை சதம் அடித்து அணியை வெற்றிப் பா தைக்கு அழைத்துச் சென்றனர். அவர்க ளுக்கு பக்கபலமாக நசீர் ஜாம்ஷெட், உமர் அக்மல், ஹாரிஸ் சோகைல், சா கித் அப்ரிடி மற்றும் மொகமது ஹபீஸ் ஆகியோர் ஆடினர். 

முன்னதாக பெளலிங்கின் போது, ஜூ னைத் கான், மொகமது இர்பான், சயீத் அஜ்மல் ஆகியோர் அடங்கிய கூட்ட ணி சிறப்பாக பந்து வீசி மே.இ.தீவு அணியின் ரன் ரேட்டைக் கட்டுப்படுத் தியது. 

மே.இ. தீவு மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 5-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி செயின்ட் லூசியா தீவில் உள்ள கிராஸ் இஸ்லெ ட் நகரில் நடந்தது. 

இந்தப் போட்டியில் முதலில் களம் இறங்கிய மே.இ.தீவு அணி ரன் எடுக்க திணறியது. இறுதியில் அந்த அணி 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 242 ரன் னை எடுத்தது. 

மே.இ.தீவு அணி தரப்பில், கேப்டன் டிவைன் பிராவோ அதிகபட்சமாக, 27 பந்தில் 48 ரன் எடுத்தார். இதில் 5 பவு ண்டரி மற்றும் 3 சிக்சர் அடக்கம். 

துவக்க வீரர் சார்லஸ் 71 பந்தில் 43 ரன் எடுத்தார். இதில் 4 பவுண்டரி அடக்கம். சாமுவேல்ஸ் 89 பந்தில் 45 ரன் எடுத் தார். இதில் 2 பவுண்டரி மற்றும் 1 சிக் சர் அடக்கம். தவிர, கெய்ல் 21 ரன்னையும், சிம்மன்ஸ் 25 ரன்னையும், சம்மி 29 ரன்னையும் எடுத்தனர். 

பாகிஸ்தான் அணி சார்பில், ஜூனைத் கான் 48 ரன்னைக் கொடுத்து 3 விக்கெ ட் எடுத்தார். தவிர, மொகமது இர்பான் மற்றும் சயீத் அஜ்மல் தலா 2 விக்கெட் எடுத்தனர். 

பாகிஸ்தான் அணி 243 ரன்னை எடுத் தால் வெற்றி பெறலாம் என்ற இலக் கை மே.இ.தீவு அணி வைத்தது. அடுத் து களம் இறங்கிய அந்த அணி 49.5 ஓவ ரில் 6 விக்கெட் இழப்பிற்கு 243 ரன்னை எடுத்தது. 

இதனால் இந்த 5-வது போட்டியில் பா கிஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத் தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொட ரை 3 - 1 என்ற கணக்கில் கைப்பற்றி யது. 

பாகிஸ்தான் அணி தரப்பில், கேப்டன் மிஸ்பா உல் ஹக் 93 பந்தில் 63 ரன் எடு த்தார். இதில் 5 பவுண்டரி மற்றும் 1 சிக் சர் அடக்கம். அகமது ஷெஜாட் 100 பந் தில் 64 ரன் எடுத்தார். இதில் 8 பவுண்ட ரி அடக்கம். தவிர, நசீர் ஜாம்ஷெட் 23 ரன்னையும், உமர் அக்மல் 37 ரன்னையும், ஹாரிஸ் சோகைல் 17 ரன்னையும் எடுத்தனர். 

மே.இ.தீவு அணி சார்பில் பெஸ்ட் 48 ரன்னைக் கொடுத்து 3 விக்கெட் எடுத் தார். தவிர, ஹோல்டர் 1 விக்கெட் எடு த்தார். இந்தப் போட்டி மற்றும் தொட ர் நாயகனாக மிஸ்பா உல் ஹக் தேர்வு செய்யப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்