முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாட்லா என்கவுண்டர்: தீவிரவாதி ஷாஜத் அகமத் குற்றவாளி

வியாழக்கிழமை, 25 ஜூலை 2013      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,ஜூலை,26 - டெல்லியில் பாட்லா என்கவுண்டர் வழக்கில் கைது செய்யப்பட்ட இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த ஷாஜத் அகமத் குற்றாளி என்று டெல்லி கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது. தண்டனை விபரம் வரும் 29-ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. 

புதுடெல்லியில் கடந்த 2008-ம் ஆண்டு தீவிரவாதிகள் தொடர் குண்டுவெடித்தனர். இதில் 26 பலியானார்கள் மற்றும் 170 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் நடந்து 6 நாட்கள் கழித்து டெல்லியில் உள்ள ஜமையா நகரில் உள்ள பாட்லா ஹவுசில் இருக்கும் பிளாட் நம்பர் எல்.18-ல் இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாதிகள் அதாவது டெல்லியில் நடந்த குண்டுவெடிப்பில் தொடர்புடைய தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அங்கு விரைந்தனர். அப்போது போலீசார் வருவதை பார்த்து அந்த அறையில் தங்கியிருந்தவர்கள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில் ஒரு இன்ஸ்பெக்டர் உள்பட 3 போலீஸ்காரர்கள் பலியானார்கள் மற்றும் பல தீவிரவாதிகள் பலியானதாக தெரிகிறது. உயிருடன் ஒரு தீவிரவாதியை மட்டும் போலீசார் பிடித்தனர். அந்த தீவிரவாதியின் பெயர் ஷேக்ஜத் அகமத் என்று தெரியவந்தது. இது தொடர்பான வழக்கு டெல்லி கோர்ட்டில் நடைபெற்றது. விசாரணை முடிந்தது. விசாரணை முடிவில் தீவிரவாதி ஷேக்ஜத் அகமத் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டான். மேலும் தண்டனை விபரம் வரும் 29-ம் தேதி அறிவிக்கப்படும் என்றும் அடிஷனல் செசன்ஸ் நீதிபதி ராஜேந்திதர் குமார் சாஸ்திரி அறிவித்தார். தலைமை காவலர்கள் பல்வந்தர் சிங், ராஜ்பீர் சிங் ஆகியோர் மரணமடைவதற்கும்,போலீஸ் இன்ஸ்பெக்டர் எம்.சி.சர்மா ஆகியோர் மரணம் அடைவதற்கு காரணமாக ஷேக்ஜத் அகமத் காரணமாக இருக்கிறார் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் கூறினார். போலீஸ் அதிகாரிகளை தாக்கியும் அவர்கள் தங்களுடைய கடமையை செய்யவிடாமலும் தீவிரவாதி அகமத் இடையூறு செய்துள்ளார் என்றும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார். ஆனால் வழக்கு தொடர்பாக கோர்ட்டில் குறிப்பிட்ட நேரத்தில் ஆஜராகாத வழக்கில் அகமத் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்