ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் கவலை

வியாழக்கிழமை, 25 ஜூலை 2013      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,ஜூலை,26 - முன்கூட்டியே நான் ஜனாதிபதியாகியிருந்தால் ஜனாதிபதி மாளிகையில் சில பகுதிகள் இடிந்து விழுந்திருக்காமல் பாதுகாத்திருப்பேன் என்று கவலைபடக்கூறினார். பிராணப் முகர்ஜி ஜனாதிபதியாக பதவி ஏற்று நேற்றுடன் ஓராண்டு முடிவடைந்தது. இதனையொட்டி நேற்று அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். ஜனாதிபதி மாளிகையில் கட்டப்பட்ட் பொதுநூலகம் என்ற பெயரில் நூலகத்தை திறந்து வைத்தார். இந்த நூலகத்தில் பல்வேறு தகவல்கள் அடங்கிய புத்தகங்கள், செய்திதாத்தாள்கள், கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. ஜனாதிபதி மாளிகையில் உள்ள மறைந்த ஜனாதிபதி டாக்டர் ராஜேந்திர பிரசாத் சர்வோதய வித்யாலயா பள்ளியில் புதியதாக கட்டப்பட்டுள்ள கட்டிடத்தையும் திறந்துவைத்தார். மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த சிற்பி ராம் சுதார் வடித்த மகாத்மா காந்தியின் வெண்கல உருவச்சிலையையும் பிரணாப் திறந்துவைத்தார். அப்போது அவர் கூறுகையில் ஜனாதிபதி மாளிகைக்கு நான் முன்கூட்டியே வந்திருந்தால் இங்கு பல கட்டிடங்கள் இடிந்து விழுந்திருக்காமல் பாதுகாத்திருப்பேன் என்று சிறிது கவலைப்படக்கூறினார். ஜனாதிபதி மாளிகையில் நூலகத்தை புதுப்பித்துள்ள அவரது குழுவையும் செயலாளர் ஒமிதா பாலையும் பிரணாப் பாராட்டினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: