செவ்வாய் கிரகத்துக்கு ராக்கெட் அனுப்புவது பகட்டு வேலை

வியாழக்கிழமை, 25 ஜூலை 2013      இந்தியா
Image Unavailable

 

பெங்களூர், ஜூலை. 26 - செவ்வாய் கிரகத்துக்கு ராக்கெட் அனுப்புவது என்பது பகட்டு வேலை. தங்களை பிரபலப்படுத்தி கொள்வதற்காக இஸ்ரோ இவ்வாறு செய்கிறது என்று இந்திய விண்வெளி ஆய்வு மைய முன்னாள் தலைவர் மாதவன் நாயர் கூறியுள்ளார். செவ்வாய் கிரகத்தில் ஆய்வு நடத்த ராக்கெட்டை அனுப்பும் இஸ்ரோவின் திட்டம் மிகவும் அர்த்தமுள்ளது. இந்தியாவின் தொழில் நுட்ப திறனை உலகுக்கு உணர்த்தும் வகையில் இது அமையும் என்று இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் ஏற்கனவே கூறியுள்ள நிலையில் மாதவன்நாயரின் இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

பெங்களூரில் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், இந்தியாவில் தொலை தொடர்புக்கான டிரான்ஸ்போர்ட்டர்கள் பற்றாக்குறையாக உள்ளன. இந்த சூழ்நிலையில் இஸ்ரோ ரூ. 450 கோடி செலவில் செவ்வாய்க்கு ராக்கெட் அனுப்பிஆய்வு மேற்கொள்வது வீண் செலவு செய்து விளம்பரம் தேடும் செயல். அதனை விட்டு விட்டு உபயோகமான காரியங்களை செய்ய முயற்சிக்க வேண்டும். அப்படி செவ்வாய்க்கு ராக்கெட்டை ஏவினாலும் அதுவும் மற்றொரு பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டை ஏவுவது போல்தான். 

அதில் இருந்து செவ்வாய் குறித்து தகவல் கிடைக்க 8 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டும். எனது இந்த கருத்தை இந்தியாவின் அறிவியல் சமூகம் சிந்தித்து பார்க்க வேண்டும் என்றார். செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய பி.எஸ்.எல்.வி. சி 25 ரக ராக்கெட்டை இஸ்ரோ அடுத்த மாதம் தயார்படுத்த இருக்கிறது. அக்டோபர் 21 ல் இருந்து நவம்பர் 7 ம் தேதிக்குள் செவ்வாய்க்கு இந்த ராக்கெட்டை அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்: