முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரிப்பில் விஜய் நடிப்பில் ``வேலாயுதம்''

வெள்ளிக்கிழமை, 6 மே 2011      சினிமா
Image Unavailable

 

சென்னை, மே.6 - விஜய் நடிக்க எம்.ராஜா இயக்கத்தில் வி.ரவிசந்திரன் வழங்கும் ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரிக்கும் படம் வேலாயுதம். வேகமாக வளர்ந்து வரும் இப்படம் பற்றி சொல்வதற்கு ஏராளமான சுவையான தகவலகள் உள்ளன. விஜய் நாயகன் ஜெனிலியா, ஹன்சிகா நாயகிகள். சரண்யா மோகன் விஜய்யின் தங்க. இவர்கள் பிரதான நடசத்திரங்கள் பிற நட்சத்திரங்கள், சந்தானம், எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு, பாண்டியராஜன், சூரி, சிங்முத்து, வையாபுரி, அங்காடித்தெரு, லிங்கேஷ், காதல் தண்டபாணி, முத்துக்கு முத்தாக, வீரசமர், நான் கடவுள் ராகேந்திரன், கிரேன் மனோகர், ஷாயாஜி ஷிண்டேன், வின்சென்ட் அசோகன், ஓ.ஏ.கே.சுந்தர், நஞ்சுபுரம் ராகவ், ஸ்டண்ட் செல்வா மற்றும் இந்தியிலிருந்து அறிமுகமாகும் புத்தம்புது இரண்டு வில்லன்கள், அவர்கள் பெயர்கள் சஸ்பென்சாக வைத்துள்ளார்கள்.

மக்களில் ஒருவனாக இருக்கும் ஓர் இளைஞன் மனித நேய பண்பால் மக்களுக்கே தலைவன் என்கிற நிலைக்கு உயரும் கதை. சுருங்க சொன்னால் அகரம் ஒன்று சிகரமாய் மாறும் கதை. கிராமமும் நகரமுமாக மாறி மாறி பயணம் செய்கிறது கதை. கிராமத்து கிளர்ச்சியையும் நகரத்து கவர்ச்சியையும் தரிசிக்க வைக்கும் காட்சி அமைப்புகள் உண்டும். இது ஒரு முக்கோண காதல் கதை மட்டுமல்ல அண்ணன் தங்கை பாசத்தை அழகாகவும் புதுவிதமாகவும் சொல்லும் படமும் கூடி இது ஓர் ஆக்ஷன் படம் மட்டுமல்ல அழகான நடிப்பை வெளிப்படுத்தும் படமும் கூட. நல்லதொரு கதை சொல்லவும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை திருப்தி செய்பவராகவும் இயக்குனர் மிளிரும் படம்.

கதாநாயகனாகவும் கதை நாயகனாகவும் விஜய் அழகு காட்டும் படம். பவுனூர் என்கிற கிராமத்தில் வசிக்கும் இளைஞன் வேலு. அவன் ஒரு பால்காரன். அவன் விற்பது பால். அன்பால், நட்பால் பிறரை எல்லாம தன்பால் ஈர்க்கிறான். அவன் காற்றுமாதிரி இருப்பவன் அந்த ஊருக்கு. காற்று எளிமையானது. ஆனால் காற்றில்லாமல் உயிர்வாழ முடியாது அல்லவா? அது போல்தான் வேலு அந்த ஊருக்கு. காதலனாக பாசமுள்ள அண்ணனாக ஆவேச இளைஞனாக விஜய்க்கு நடிப்பில் ஜீசல்பந்தி நடத்தும் வாய்ப்பு இப்படத்தில் கிடைத்துள்ளது.

இசை விஜய் ஆண்டனி வேட்டைக்காரனை மிஞ்சும் அளவில் இசை வரவேண்டும் என்று உழைத்து வருகிறார். விஜய்யை பாட வைக்க நடந்து முயற்சியை விஜய் ஆண்டனி பாடுமளவுக்கு திசைமாற்றிவிட்டார் விஜய் 5 பாடல்கள் விவேகா, அண்ணாமலை தவிர சிவசண்முகன் என்பவரும் எழுதியுள்ளார். இவர் தகப்பன்சாமி, திண்டுக்கல்சாரதி படங்களின் இயக்குனர். படத்தில் 5 பாடல்கள் அசோக் ராஜ், பிருந்தா, பிரேம் ரக்ஷித், மாஸ்டர்கள் அனல் பறக்கும் 6 சண்டை காட்சிகளை ஸ்டண்ட் செல்வா அமைத்துள்ளார். வேங்கை, மங்காத்தா படங்களுக்கும் இவரே சண்டை காட்சிகள் அமைத்து இருக்கிறார். படத்தில் 5 பாடல்கள் அசோக் ராஜ், பிருந்தா, பிரேம் ரக்ஷித், மாஸ்டர்கள் அனல் பறக்கும்  6 சண்டை காட்சிகளை ஸ்டண்ட் செல்வா அமைத்துள்ளார். வேங்கை,  மங்காத்தா படங்களுக்கும் இவரே சண்டைக் காட்சிகள் அமைத்து இருகிகறார். சுமார் 80 சதவீதம்  படப்பிடிப்பு முடிந்துள்ளது. ஒரு பாடல்காட்சி மற்றும் க்ளைமாக்ஸ் மட்டுமே எடுக்க வேண்டியுள்ளது. அர்ப்பணிப்புள்ள நடிகர், ஆர்வமுள்ள இயக்குநர், செலவுக்கு அஞ்சாத தயாரிப்பாளர். வேறென்ன வேண்டும் ஒரு படம் நினைத்த மாதிரி அமைய. வேலாயுதம் வேகமாக வளர்ந்து வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்