முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாணவிகள் ஜீன்ஸ் அணிய அலிகார் மு.பல்கலை., அனுமதி

ஞாயிற்றுக்கிழமை, 28 ஜூலை 2013      இந்தியா
Image Unavailable

 

லக்னோ, ஜூலை. 28 - அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக விடுதியில் தங்கியிருந்த மாணவிகளுக்கு உடை அணிய விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது. லக்னோவில் உள்ள அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவியர் விடுதியில் ஜீன்ஸ், டிசர்ட் அணியவும், இன்டர்நெட் பார்க்கவும் தடை விதிக்கப்பட்டிருந்தது. கவர்ச்சியான உடை அணிந்தால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டிருந்தது. அங்குள்ள 6 விடுதிகளிலும் இந்த விதிமுறை கட்டாயம் பின்பற்றப்பட்டு வந்தது. மேலும் இந்த விடுதி மாணவிகள் சினிமாவிற்கும், ரெஸ்டாரென்டிற்கும் போகக்கூடாது. இன்டர்நெட் பார்க்கவும் தடை இருந்தது. தங்களுடைய விடுதி டைனிங் ஹாலில் மட்டுமே பெண் மாணவியர்கள் உணவு உட்கொள்ள வேண்டும்.தனியாக செல்போன் வைத்து பேசவும், தடை இருந்தது.

இந்த நிலையில் இந்த விதிமுறை தளர்த்தப்பட்டுள்ளது. அப்துல்லா ஹால் கஜாலா பர்வீன் என்பவர் விடுத்துள்ள அறிக்கையில், டிரஸ் கோடு விசயத்தில் தளர்வு வேண்டும் என்று மாணவியர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து விடுதிக்குள், அறைக்குள் ஜீன்ஸ், டிசர்ட் அணிய தடை இல்லை அதே சமயம், அறையை விட்டு பொது இடங்களுக்கு வரும் போது கண்ணியமாக உடை அணியவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். அவ்வாறு உடை அணியாமல் வரும் மாணவியர்களுக்கு ஏற்படும் விபரீதங்களுக்கு நிர்வாகம் பொறுப்பேற்ற முடியாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் கல்வியாண்டு முதல் இந்த உடை தளர்வு இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்