முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குற்றப் பின்னணி இருப்போருக்கு சீட் இல்லை: ராகுல்

ஞாயிற்றுக்கிழமை, 28 ஜூலை 2013      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, ஜூலை. 28 - குற்றப் பின்னணி உள்ளோர் தேர்தலில் போட்டியிட சீட் வழங்க மாட்டோம் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். குற்றப் பின்னணி உடையவர்களுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட சீட் வழங்கப்பட மாட்டாது என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் தெரிவித்துள்ளார்.

டெல்லி, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், ராஜஸ்தான், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதைத் தொடர்ந்து இந்த 5 மாநிலங்களின் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுடன் டெல்லியில் நேற்று ராகுல் காந்தி ஆலோசனை நடத்தினார்.

இந்தக் கூட்டத்தில் சட்டசபை தேர்தலில் குற்றப் பின்னணி உடையோருக்கு சீட் வழங்க முடியாது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை டெல்லி மேலிடமோ மாநில தலைமையகங்களோ முடிவு செய்யாது. கட்சியின் அடிமட்டத்தில் இருப்போருக்குத்தான் ஒரு வேட்பாளரின் முழு பின்னணி தெரியும் என்பதை கருத்தில் கொண்டு வேட்பாளர் தேர்வு நடைபெறும் என்று ராகுல் கூறியிருக்கிறார்.

டெல்லிக்கான காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் ஷகீல் அகமது, சத்தீஸ்கர் பொறுப்பாளர் ஹரிபிரசாத், மத்திய பிரதேச பொறுப்பாளர் மோகன் பிரகாஷ், ராஜஸ்தான் பொறுப்பாளர் குருதாஸ் காமத், மிசோராம் பொறுப்பாளர் லூசினோ டிபளேரியோ ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்