முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் பதவிக்கு ராகுல் - மோடி தகுதியானவர்கள் அல்ல

ஞாயிற்றுக்கிழமை, 28 ஜூலை 2013      ஊழல்
Image Unavailable

 

பரூக்காபாத், ஜூலை. 28 - பிரதமர் பதவிக்கு குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தகுதியானவர்கள் அல்ல என்று சமூக சேவகர் அன்னா ஹசாரே தெரிவித்தார். உத்தர பிரதேச மாநிலம் பரூக்காபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க ஹசாரே வந்திருந்தார். அவரிடம் மக்களவை தேர்தலில் பா.ஜ.க சார்பில் மோடியும், காங்கிரஸ் தரப்பில் ராகுல் காந்தியும் பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்படுவார்கள் என்ற கருத்து பரவலாக பேசப்படுகிறது என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த ஹசாரே, அவர்கள் இருவரையும் பிரதமர் வேட்பாளர்களாக என்னால் ஏற்க முடியவில்லை. 

பிரதமர் பதவி என்பது கண்ணியம் மற்றும் மரியாதைக்குரிய பதவியாகும். இருவரும் அந்த பதவிக்கு தகுதியானவர்கள் அல்ல. குஜராத்தில் பத்து ஆண்டுகளாக முதல்வராக இருக்கும் மோடி, லோக் அயுக்தாவை அமைக்க தடையாக உள்ளார். அவரால் ஏற்படுத்தப்படுத்தப்பட்டுள்ள ஊழல் தடுப்பு தீர்ப்பாணையத்தால் ஊழலை ஒழிக்க முடியாது. கட்சி அரசியல்தான் நாட்டில் ஊழலுக்கும் தவறான செயல்களுக்கும் காரணமாக உள்ளது. 

எனது ஜனகிராந்தி முன்னணியில் அர்ப்பணிப்பு உணர்வு மிக்க 6 கோடி தொண்டர்களை சேர்க்க முயற்சி எடுத்து வருகிறேன். அவர்கள் துணையுடன் டெல்லி ஜந்தர்மந்தர் டிசம்பரில் ஜன லோக்பாலுக்காக இரண்டாவது கட்ட போராட்டம் நடத்தப்படும் என்று அவர் தெரிவித்தார். வறுமைக் கோட்டை நிர்ணயிக்க திட்ட குழு கடைப்பிடித்த செலவு வரையறை பற்றி அவரிடம் கேட்ட போது, குளிர்சாதன அறையில் உட்கார்ந்திருக்கும் அதிகாரிகளால் வறுமையை சரியாக கணக்கிட முடியாது. ரூ. 13 என்பது ஒரு வாய் சோற்றுக்கு கூட பற்றாது என்று கூறினார் ஹசாரே.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்