முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்தியபிரதேசத்தில் உணவு சாப்பிட்ட குழந்தைகள் மயக்கம்

ஞாயிற்றுக்கிழமை, 28 ஜூலை 2013      இந்தியா
Image Unavailable

 

போபால்,ஜூலை.28 - மத்தியபிரதேச மாநிலத்தில், பண்டி கிராமத்தில் உள்ள ஆரம்பப் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 35 குழந்தைகள் மயங்கி விழுந்தனர் என்று அதிகாரப்பூர்வ செய்திகள் தெரிவித்தன.  இந்தப் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட குழந்தைகள் தங்களுக்கு வயிற்றுவலி ஏற்பட்டதாகவும், சிலர் வாந்தி எடுத்ததாகவும் கூறப்படுகிறது. 

இதையடுத்து இவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு விரைந்து அனுப்பி வைக்கப்பட்டனர்.  இந்த குழந்தைகள் உடல்நிலை சீராக இருப்பதாகவும், இவர்கள் அபாயக் கட்டத்தை தாண்டி விட்டதாகவும் டாக்டர்கள் தெரிவித்ததாக செய்திகள் தெரிவித்தன. 

மதிய உணவு சாப்பிட்ட இந்த குழந்தைகள் அனைவரும் 5 வயது முதல் 10 வயது வரை உள்ளவர்கள். இவர்கள் சாப்பிட்ட உணவில் புகையிலை வாசம் வந்ததாகக் குழந்தைகள் தெரிவித்தனர்.  இதையடுத்து உயர் அதிகாரிகள், கல்வி அதிகாரி, தாசில்தார் ஆகியோர்  இந்த பள்ளிக்கு வந்து விசாரணை நடத்தினர் என்றும்செய்திகள் தெரிவித்தன.

 சமீபத்தில் பீகார் மாநிலத்தில் உள்ள பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 23 குழந்தைகள் உயிரிழந்தனர். பல குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மத்தியபிரதேச மாநிலத்தில் உள்ள பள்ளியில் தற்போது இதுபோன்று மற்றொரு சம்பவம் நடந்துள்ளதால் பெற்றோர் கவலையடைந்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago