முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு: 40 பேர் உடல் சிதறி பலி

ஞாயிற்றுக்கிழமை, 28 ஜூலை 2013      உலகம்
Image Unavailable

 

இஸ்லாமாபாத், ஜூலை.28 - பாகிஸ்தானில் நடந்த இரு குண்டு வெடிப்புச் சம்பவங்களில் 40 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். பலர் பலத்த காயம் அடைந்தனர்.    பாகிஸ்தானில் கடந்த மாதம் நவாஸ் ஷெரீப் பிரமராக பதவியேற்றதிலிருந்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதில் குறிப்பாக ஷியா பிரிவு முஸ்லிம்கள் மீது தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. தற்போது முஸ்லிம்கள் புனித ரம்ஜான் நோன்பு கடைபிடித்து வருகின்றனர்.

இதை சீர்குலைக்கும் வகையில் பல்வேறு இடங்களில் தாக்குதல் நடைபெற்று வருகிறது. சில இடங்களில் நேட்டோ படையினருக்கு எண்ணெய் கொண்டு செல்லும் வாகனங்கள் மீதும், ரோந்து செல்லும் பாதுகாப்புப் படையினர் மீதும்  தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். 

தலிபான்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் ஷியா பிரிவைச் சேர்ந்த பழங்குடியினர் வசிக்கும் இடங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்துதின்றனர். பாகிஸ்தானில் வடமேற்கு பகுதியில் உள்ள குர்ரம் பழங்குடியினர் பகுதியில் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். சக்திவாய்ந்த வெடிகுண்டுகளை வீசியதில் 40 பேர் உயிரிழந்தனர். 200 பேர் பலத்தக் காயம் அடைந்தனர்.  குர்ரம் பகுதியில்  பராசினர் நகரில் நடந்த இரட்டை குண்டு

வெடிப்புத் தாக்குதலில் 20 கடைகள் தகர்க்கப்பட்டன. கடை வீதிகளில் நிறுத்தியிருந்த 90 வாகனங்கள் தீக்கிரையாயின.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்