முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ஜ.க. சார்பில் தேர்தலில் போட்டியிடுகிறார் நடிகர் சாய்குமார்

ஞாயிற்றுக்கிழமை, 28 ஜூலை 2013      சினிமா
Image Unavailable

 

ஐதராபாத், ஜூலை. 28 ​ வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடப் போவதாக நடிகர் சாய்குமார் தெரிவித்துள்ளார்.தமிழில் அந்தப்புரம் படம் மூலம் அறிமுகமானவர் சாய்குமார். வேட்டிய மடிச்சுக்கட்டு, திருவண்ணாமலை, இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் ஏராளமான படங்களில் நடித்துள்ள இவர் பாரதீய ஜனதா கட்சியில் உள்ளார்.

இவர் வருகிற பாராளுமன்ற தேர்தலில் அக்கட்சி சார்பில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பெங்களூரில் நிருபர்களிடம் கூறுகையில், இன்றைக்கு அரசியல் என்பது வயதானவர்களும், பணக்காரர்களும் இருக்கும் இடமாகிவிட்டது. இந்த நிலை மாற வேண்டும். படித்த இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும். நான் வருகிற பாராளுமன்ற தேர்தலில் கர்நாடக மாநிலம் சிக்மல்லாபுரா தொகுதியில் பாரதீய ஜனதா கட்சி சார்பில் போட்டியிட விரும்புகிறேன். அக்கட்சி சார்பில் எனக்கு டிக்கெட் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

தேர்தலில் டிக்கெட் கிடைக்கா விட்டால் பாரதீய ஜனதா கட்சிக்காக தேர்தல் பிரசாரம் செய்வேன். குஜராத் முதல்வர் நரேந்திரமோடிக்கு செல்வாக்கு அதிகரித்து வருகிறது. அவரையே பிரதமராக அறிவிக்க வேண்டும். அவரது தலைமைக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்