முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹெலிகாப்டர் ஊழல்: தியாகிக்கு 2.50 கோடி கமிஷன்?

ஞாயிற்றுக்கிழமை, 28 ஜூலை 2013      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,ஜூலை.28 - இத்தாலி நாட்டில் இருந்து முக்கிய பிரமுகர்களுக்கு ரூ.3 ஆயிரத்து 500 கோடிக்கு ஹெலிகாப்டர் கொள்முதல் செய்ததில் முன்னாள் விமானப்படை தலைமை தளபதி தியாகிக்கு ரூ.2.50 கோடி கமிஷன் கொடுத்திருப்பது தெரியவந்துள்ளது. நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்பட குறிப்பிடத்தக்க முக்கிய பிரமுகர்கள் பாதுகாப்பாக பயணம் செய்ய இத்தாலி நாட்டில் உள்ள அகஸ்ட்டா வெஸ்டேலண்ட் என்ற நிறுவனத்திடம் இருந்து ரூ.3 ஆயிரத்து 500 கோடிக்கு ஹெலிகாப்டர்கள் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. அப்போது இந்திய விமானப்படை தலைமை தளபதியாக தியாகி இருந்தார். இந்த ஒப்பந்தம் ஏற்பட சுமார் ரூ.360 கோடி கமிஷன் கொடுத்திருப்பது தெரியவந்துள்ளது. இதுதொடர்பான வழக்கு இத்தாலி நாட்டில் நடந்து வருகிறது. விசாரணையின்போது கமிஷன் கொடுத்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்த ரூ.360 கோடி கமிஷனில் 2.50 கோடி ரூபாய் தளபதி தியாகி உள்பட அவரது குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் 12 பேர்களுக்கு போய் சேர்ந்திருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன என்று கூறப்படுகிறது. மேலும் ஆதாரங்களை திரட்டுவதற்காக இந்திய புலனாய்வுத்துறை அதிகாரிகளும் பாதுகாப்புதுறை அதிகாரிகளும் இத்தாலிக்கு விரைவில் செல்ல உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்