முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா - பாக். இடையே நதிநீர் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை

ஞாயிற்றுக்கிழமை, 28 ஜூலை 2013      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, ஜூலை. 29 - இந்தியா, பாகிஸ்தான் நாடுகளிடையே அடுத்த மாதம் நதிநீர் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை தொடங்கும் என்று தெரிகிறது. இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே பல்வேறு நிலைகளில் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. ஆனால் பாகிஸ்தான் தொடர்ந்து பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வருவதால் அவ்வப்போது பேச்சுவார்த்தை தடைபட்டு வருகிறது. மேலும் போர் நிறுத்த ஒப்பந்தத்தையும் மீறி பாகிஸ்தான் துருப்புகள் அவ்வப்போது இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. 

இது ஒருபுறமிருக்க, சீன படைகளின் ஊடுருவலும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் இது பற்றி பேசி தீர்த்து விடலாம் என்கிறார் பாதுகாப்பு துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி. இதற்கிடையில் பாகிஸ்தானில் சில மாதங்களுக்கு முன்பு நடந்த தேர்தலில் வெற்றி பெற்று நவாஸ் ஷெரீப் பிரதமராகி இருக்கிறார். இவர் இந்தியாவுடன் நல்லுறவு வைப்பதே தனது விருப்பம் என்று அடிக்கடி கூறி வருகிறார். 

இந்த நிலையில் இந்தியா பாகிஸ்தான் நாடுகளிடையே அடுத்த மாதம் நதி நீர் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவுடன் நல்லுறவை விரும்பும் பாகிஸ்தான் பிரதமராக நவாஸ் ஷெரீப் இருப்பதால் இந்த பேச்சுவார்த்தை நடைபெறுவது உறுதியாகி விட்டது. இதனிடையே வருகிற செப்டம்பர் மாதம் பிரதமர் மன்மோகன்சிங் நியூயார்க் செல்கிறார். அங்கு அவர் ஐ.நா. சபை கூட்டத்தில் கலந்து கொள்வார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. அப்போது பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை அங்கு அவர் சந்தித்து பேச்சு நடத்தலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்