முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கருப்பின பெண் அமைச்சர் மீது வாழைப்பழ வீச்சு

ஞாயிற்றுக்கிழமை, 28 ஜூலை 2013      உலகம்
Image Unavailable

 

ரோம், ஜூலை. 29 - இத்தாலியில் கருப்பின பெண் அமைச்சரான சிசில் கியேங்கே மீது வாழைப்பழம் வீசப்பட்டது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. காங்கோவில் பிறந்தவர் சிசில் கியேங்கே. இத்தாலியில் குடியேற்றத் துறை அமைச்சராக உள்ளார். ஜனநாயகக் கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசினார். அப்போது பார்வையாளர்களில் ஒருவர் சிசில் மீது வாழைப்பழத்தை தூக்கி எறிந்தார். வாழைப்பழம் சிசில் மீது படவில்லை. ஆனால் இந்த சம்பவத்திற்கு இத்தாலி முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

முன்னதாக நார்தர்ன் லீக் கட்சி தலைவர் ராபர்ட் கால்டிரோலி சிசிலை பார்த்தால் அவர் ஒராங்குட்டான் போன்று இருப்பதாக தனக்கு தோன்றுகிறது என்று தெரிவித்தார். இது குறித்து சிசில் எதுவும் தெரிவிக்கவில்லை. ஆனால் வாழைப்பழ வீச்சை உணவுப் பொருள் வீணடிப்பு என்று தெரிவித்துள்ளார் சிசில்.

இந்த சம்பவம் குறித்து ட்விட்டரில் பல அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள் சிசிலுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளதோடு, வாழைப்பழ வீச்சுக்கு கடும் கண்டனமும் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்