முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2ஜி வழக்கு: அம்பானி தம்பதிக்கு மீண்டும் சம்மன்

ஞாயிற்றுக்கிழமை, 28 ஜூலை 2013      ஊழல்
Image Unavailable

 

புது டெல்லி, ஜூலை. 29 - 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் ரிலையன்ஸ் ஏ.டி.ஏ.ஜி குழும தலைவர் அனில் அம்பானி ஆகஸ்ட் 22 ம் தேதியும், அவரது மனைவி டினா அம்பானி ஆகஸ்ட் 23 ம் தேதியும் ஆஜராக வேண்டும் என்று டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் மீண்டும் சம்மன் அனுப்பி உள்ளது. 

ரிலையன்ஸ் டெலிகாம் நிறுவனத்தின் தலைவர் அனில் அம்பானி, அவரது மனைவி டினா அம்பானி ஆகியோரை அரசு தரப்பு சாட்சியாக சேர்க்க வேண்டும் என்று சி.பி.ஐ தாக்கல் செய்த மனுவுக்கு நீதிமன்றம் அனுமதியளித்தது. இதையடுத்து அனில் அம்பானி மற்றும் டினா அம்பானி ஆகியோர் ஜூலை 26 ம் தேதி ஆஜராக சி.பி.ஐ. நீதிமன்றம் கடந்த 19 ம் தேதி சம்மன் அனுப்பியது. 

நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருக்க அனில் அம்பானி சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை உடனடியாக விசாரணைக்கு ஏற்று கொள்ள வேண்டும் என்று 2 ஜி அலைக்கற்றை வழக்கை விசாரித்து வரும் நீதிபதி ஜி.எஸ். சிங்வி தலைமையிலான அமர்வு முன் கடந்த 25 ம் தேதி அம்பானி சார்பில் முறையிடப்பட்டது. இதை ஏற்க மறுத்த நீதிபதி சிங்வி, ஜூலை 30 ம் தேதி கூடும் சிறப்பு அமர்வு முன் இந்த மனு பரிசீலிக்கப்படும் என்று கூறினார். இதையடுத்து அனில் அம்பானி சார்பில் டெல்லி சி.பி.ஐ. க்கு சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதி ஓ.பி. ஷைனி முன் 25 ம் தேதி மனு தாக்கல் செய்யப்பட்டது. 

ஜூலை 26 ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக அனுப்பப்பட்ட சம்மன் ஜூலை 23 ம் தேதிதான் கிடைத்தது. மும்பையில் ஏற்கனவே திட்டமிடப்பட்ட அலுவல்கள் உள்ளதால் டெல்லியில் ஜூலை 26 ம் தேதி பங்கேற்க இயலாது. ஆகஸ்ட் 15 ம் தேதிக்கு பிறகு நீதிமன்றம் நிர்ணயிக்கும் தேதியில் ஆஜராகி சாட்சியம் அளிக்க தயாராக உள்ளேன் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி ஓ.பி.ஷைனி அனில் அம்பானி மற்றும் டினா அம்பானி ஆகியோர் ஜூலை 26 ம் தேதி நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிப்பதாக உத்தரவிட்டார். இந்த நிலையில் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராக மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்