முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உத்தரகாண்ட் பேரழிவு: அமெரிக்க சபையில் இரங்கல்

திங்கட்கிழமை, 29 ஜூலை 2013      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன், ஜூலை. 29 - உத்தரகாண்ட் மாநிலத்தில் இயற்கை பேரழிவில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் இரங்கல் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்திய விவகாரங்களை கவனிக்கும் குழுவின் தலைவர்களான ஜோகுரோவ்லி மற்றும் பீட்டர் ரோஸ்காம் ஆகியோர் இரங்கல் தீர்மானத்தை கொண்டு வந்தனர். அந்த தீர்மானத்தில் கூறப்பட்டிருப்பதாவது, 

உத்தரகாண்டில் இயற்கை பேரழிவில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம். இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும். அங்கு ஆதரவின்றி தவிக்கும் மக்களுக்கு ஆதரவு நீட்டும் வகையில் உதவி வரும் இந்திய மக்களின் சேவை மேலும் தொடர வேண்டும். பேரழிவில் வீடு, நிலம் உள்ளிட்ட சொத்துக்களை இழந்து தவிக்கும் மக்களுக்கு தேவையான அனைத்து விதமான உதவிகளும் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. 

இதையடுத்து தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வெளிநாட்டு விவகாரங்களுக்கான நிலை குழுவுக்கு இந்த தீர்மானம் அனுப்பப்பட்டுள்ளது. உத்தரகாண்டில் ஏற்பட்ட இயற்கை பேரழிவில் சிக்கி ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோரை காணவில்லை என்று கூறப்படுகிறது. பலர் முகாம்களுக்கும் வேறு இடங்களுக்கும் மாற்றப்பட்டுள்ளனர். இங்கு சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணியும் இடிபாடுகளை அகற்றும் பணியிலும் ராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago