முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிரபராதி என்று நிரூபிப்பேன் - கனிமொழி

வெள்ளிக்கிழமை, 6 மே 2011      அரசியல்
Image Unavailable

புதுடெல்லி,மே.6 - ரூ.1.76 லட்சம் கோடி 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் நிரபராதி என்று நிரூபிப்பேன் என்று கனிமொழி எம்.பி. கூறியுள்ளார். 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு தொடர்பாக விசாரித்து வரும் சி.பி. ஐ. சார்பாக சுப்ரீம்கோர்ட்டில் இரண்டு குற்றப்பத்திரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. முதல் குற்றப்பத்திரிகையில் முதல்வர் கருணாநிதி மகள் கனிமொழி சேர்க்கப்படவில்லை. இரண்டாவது முறையாக தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் கனிமொழி எம்.பி. பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. அதுவும் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் கூட்டு சதி செய்ததாக அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இதனையொட்டி விசாரணைக்கு வருமாறு சி.பி.ஐ. கோர்ட்டு சம்மன் அனுப்பியது. டெல்லியில் பாட்டியாலாவில் உள்ள சி.பி.ஐ. கோர்ட்டில் இன்று கனிமொழி ஆஜராகிறார். இதற்காக அவர் நேற்றுமுன்தினமே டெல்லி சென்றுவிட்டார். கனிமொழியை காப்பாற்றுவதற்காக டி.ஆர். பாலு, தமிழக அமைச்சர் துரைமுருகன், திருச்சி சிவா மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் டெல்லி சென்று முன்னாள் நீதிபதிகள் மற்றும் சட்ட வல்லுனர்களை சந்தித்து ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. 

இந்தநிலையில் டெல்லி சென்றுள்ள கனிமொழி நேற்று தொலைகாட்சி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் ஆஜராகும்படி சி.பி.ஐ. கோர்ட்டு சம்மன் அனுப்பியிருப்பது குறித்து கேட்டனர். அதற்கு பதில் அளித்த கனிமொழி 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் நான் விடுவிக்கப்படுவதோடு நிரபராதி என்பதை நிரூபிப்பேன் என்றார். எனக்கும் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கும் தொடர்பு இருக்கிறது என்று கூறுவதை சட்ட ரீதியாக எதிர்த்து போராடுவேன் என்றார். குற்றப்பத்திரிகையில் நான் கூட்டு சதிகாரி என்று கூறப்பட்டிருக்கிறது. இது மிக மிக பெரிய குற்றச்சாட்டாகும். ஆனால் நான் எந்தவித ஊழலும் செய்யவில்லை. நான் மிகவும் தூய்மையானவள். அதனால் அந்த குற்றச்சாட்டில் இருந்து நான் விடுவிக்கப்படுவேன். நான் நிரபராதி என்பதையும் நிரூபித்துக்காட்டுவேன் என்றும் கனிமொழி மேலும் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்