முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமரை மக்களே தேர்வு செய்ய வேண்டும்: ஹஸாரே

திங்கட்கிழமை, 29 ஜூலை 2013      ஊழல்
Image Unavailable

 

கோண்டா, ஜூலை.30 - நமது நாட்டின் பிரதமரை மக்களே நேரடியாக தேர்வு செய்ய வேண்டும் என்று சமூர சேவகர் அன்னா ஹஸாரே யோசனை தெரிவித்துள்ளார். அவரது ஜன தந்திர யாத்திரையின் ஒரு பகுதியாக உத்தரபிரதேசத்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் அவர் கோண்டா நகரில் நிருபர்களிடம் கூறியதாவது:

 நமது நாட்டின் பிரதமரை மக்களே நேரடியாக தேர்வு செய்ய வேண்டும். இல்லாவிட்டால் நாட்டுக்கு எந்த நன்மையும் ஏற்படாது. 5  ரூபாய்க்கும், 12 ரூபாய்க்கும் சாப்பாடு கிடைக்கும் என்று சில அமைச்சர்கள் கூறியிருப்பது கொடூரமான நகைச்சுவை. மக்களுக்கு 5 ரூபாய்க்கு சாப்பாடு கிடைக்கும் பட்சத்தில் பல்வேறு  இலவச சலுகைகளைப் பெறும் எம்.பி.க்களின் மாதச் சம்பளம் ஏன் 80 ஆயிரம் ரூபாயாக இருக்க வேண்டும்?. 

எந்த அரசியல் கட்சியுமே வலுவான ஊழல் தடுப்புச் சட்டம் கொண்டுவரத் தயாராக இல்லை என்று ஹஸாரே கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்