முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிளஸ் 2 ரிசல்ட் திங்கட்கிழமை வெளியீடு

வெள்ளிக்கிழமை, 6 மே 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை,மே.7​- பிளஸ் 2 ரிசல்ட் எஸ்.எம்.எஸ்.மூலம் தெரிவிக்க நூலகத்துறை ஏற்பாடு செய்து வருகிறது. எனவே, நூலகத்துறையில் பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மார்க் ஷீட்டுகள் வருகிற 25ம் தேதி பள்ளிகளில் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 8.5 லட்சம் மாணவ​ மாணவிகள் பிளஸ்​2 தேர்வு எழுதினார்கள். 7 லட்சத்து 70 ஆயிரம் பேர் பள்ளிகள் மூலமாக நேரடியாக தேர்வு எழுதினார்கள். தேர்வு முடிவுகள்  வருகிற 9​ந் தேதி காலை 9 மணிக்கு வெளியிடப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தேர்வுத்துறை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. 

பிளஸ்​2 தேர்வு மதிப்பெண்கள் சரிபார்க்கும் பணியும் தவறுகளை திருத்தும் பணியும் நிறைவடையும் நிலையில் உள்ளன. இந்த பணிகள் அனைத்தும் இன்று(சனிக்கிழமை) மாலைக்குள்  நிறைவடையும்.

நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை அந்தந்த பள்ளிகளுக்கு மதிப்பெண் பட்டியல் அனுப்பப்படும். மாணவர்கள் திங்கட்கிழமை தேர்வு முடிவின் போது மதிப்பெண் விவரங்களை அறிந்து கொள்ளலாம். தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட பிறகு டேட்டா சென்டர்களில் மார்க் ஷீட்டுகள் அச்சடிக்கும் பணி தொடங்குகிறது. இந்த பணி 10 நாட்களுக்கு நடைபெறும்.

ஒவ்வொரு நாளும் அச்சடிக்கப்பட்டு வரும் மார்க் ஷீட்டுகளை  தேர்வுத்துறை பணியாளர்கள் சரிபார்ப்பார்கள்.  மதிப்பெண், பெயர் விவரங்கள், சான்றிதழின் உண்மை தன்மை ஆகியவற்றை சரிபார்த்த பிறகு பின்னர் அரசு தேர்வுகள் இயக்குனர் முத்திரை அதில் குத்தப்படும்.

மார்க் ஷீட்டுகள் முழுமையாக சேகரித்து தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு ஒரே நாளில் அனுப்பி வைக்கப்படும். பிளஸ்​2 தேர்வு எழுதிய மாணவர்கள் அவரவர் பள்ளிகளில் மே 25​ந்தேதி மார்க் ஷீட்டுகளை பெற்றுக்கொள்ளலாம் என்று தேர்வு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

தேர்வு முடிவுகள் பள்ளிக்கல்வி இணைய தளத்தில் வழக்கமாக வெளியிடப்படும். மேலும் எஸ்.எம்.எஸ். மூலம் வெளியிட பொது நூலகத் துறை சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது. இதற்கு  சூசூசூ.சிடூஙீசீஸங்டுஷங்டுஸஙுஹஙுடுடீஙூ.கிச்சு என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்வதற்கு முன் தங்களின் பெயர், தேர்வு பதிவு எண், முகவரி, செல்போன் எண் ஆகியவற்றை சரியாக பதிவு செய்து கொள்ளவேண்டும். வருகிற 9​ந்தேதி வரை இணையதளத்தில் பதிவு செய்யலாம். இவ்வாறு பதிவு செய்யும் மாணவர்களின் செல்போனுக்கு அவர்களின் மதிப்பெண் எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்பப்படும். கணினி மயமாக்கப்பட்ட மாவட்ட மைய நூலகங்களில் பிளஸ்​2 தேர்வு முடிவுகளை 3 நாட்கள் இலவசமாக பார்த்துக் கொள்ளலாம் என்று பொது நூலகத்துறை இயக்குனர் க. அறிவொளி தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்