முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆப்கானிஸ் தானிலிருந்து அமெரிக்கப் படைகள் வாபஸ்

புதன்கிழமை, 31 ஜூலை 2013      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன்,ஆக.1  - ஆப்கானிஸ்தானிலிருந்து, அமெரிக்கப் படைகள் வாபஸ் ஆனதையொட்டி, அங்கு ஏற்படும் ஸ்திரமற்ற சூழ்நிலையால் தீவிரவாதம் அதிகரிக்கும் என்று இந்தியாவும், பாகிஸ்தானும் கவலையடைந்துள்ளன என்று அமெரிக்க உயர் அதிகாரி பீட்டர் லவோய் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது: இனிமேல் வரும் ஆண்டுகளில் இந்தியாவும், பாகிஸ்தானும் முக்கிய பங்கு வகிக்கும் என்று அமெரிக்கா நம்புகிறது. ஆப்கானிஸ்தானில், இந்தியாவும், பாகிஸ்தானும் முக்கிய பங்காற்ற வேண்டிய சூழ்நிலை உள்ளது. ஒருவேளை ஆப்கானிஸ்தானில் ஸ்திரமற்ற நிலை ஏற்பட்டால் அங்கு தீவிரவாதம் அதிக அளவில் தலைதூக்கும் என்று இந்தியா அஞ்சுகிறது. அப்படி ஒரு சூழ்நிலை வந்தால் தீவிரவாதிகள் எங்கு சொல்வார்கள்?. அவர்கள் இந்தியாவை தாக்குவார்களோ என்றும் இந்தியா அஞ்சுகிறது. உலகில் எல்லைகள் மிக முக்கியமானவையாகும்.

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள அரசியல் நிலவரத்தால் அவைகள் தாக்கப்படலாம். ஏனென்றால் இவை ஒன்றொடு ஒன்று பின்னிப்பிணைந்துள்ளன. பாகிஸ்தாண் ஒரு அசாதாரண சூழ்நிலையைச் சந்திக்க உள்ளது. சுமார் 15 ஆயிரம் பாகிஸ்தான்  துருப்புகள் இதை எதிர்த்துப் போராடி வருகின்றன. ஆப்கானிஸ்தானில் ஸ்திரமற்ற சூழ்நிலை ஏற்படும் என்று பாகிஸ்தான் கவலைப்படுகிறது. இந்த இரு நாடுகளும் நேரடியாகப் பாதிக்கப்படக்கூடியவை. எனவே இரு நாடுகளும் தங்களது உறவை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். இரு நாடுகளின் பிரச்சனைகளும் தீர்க்கப்பட வேண்டும். 

இந்த இரு நாடுகளின் பிராந்தியத்தில் அமைதி நிலவ அமெரிக்க அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். காஷ்மீரில் பல ஆண்டுகளாக எல்லை கட்டுப்பாடு பகுதியில் வன்முறை அடிக்கடி ஏற்படுகிறது. இது கவலையளிக்கிறது. இரு நாடுகளிலும் சீரான உறவு ஏற்பட அமெரிக்கா தேவையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என்றும் பீட்டர் லவோய் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்