முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்னோடென்னுக்கு ரஷ்யாவில் அகதி அஸ்தஸ்து

வெள்ளிக்கிழமை, 2 ஆகஸ்ட் 2013      உலகம்
Image Unavailable

 

மாஸ்கோ, ஆக. 3 - ரகசியங்களை வெளியிட்டதற்காக அமெரிக்காவில் தேடப்பட்டு வரும் ஸ்னோடென்க்கு ரஷ்யாவில் அகதி அந்தஸ்து கிடைத்துள்ளது. விரைவில் அவர் ஏர்போர்ட்டில் இருந்து வெளியேறுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அமெரிக்கா மற்ற நாடுகளை உளவு பார்த்த ரகசியங்களை சமீபத்தில் வெளியிட்டார் அமெரிக்க முன்னாள் உளவுத்துறை ஊழியரான ஸ்னோடென். அவர் கூறிய ரகசியங்களைக் கேட்டு உலகமே அதிர்ச்சியடைந்தது. நாட்டின் ரகசியங்களை வெளியிட்டதற்காக ஸ்னோடென்னை அமெரிக்கா குற்றவாளியாக அறிவித்து, தேடுதல் வேட்டை நடத்தியது. ஒவ்வொரு நாட்டிடமும் தஞ்சம் கேட்டுப் பார்த்தார் ஸ்னோடென். ஆனால், இந்தியா உட்பட அனைத்து நாடுகளும் கை விரித்த நிலையில் ரஷ்யாவிடம் மட்டும் தொடர்ந்து போராடி வந்தார் ஸ்னோடென். இதற்காக அவர் ஏர்போர்ட்டிலேயே தங்கி இருந்தார். அவரது தொடர் முயற்சிகளுக்குப் பிறகு தற்போது ஸ்னோடென்னுக்கு ரஷ்யாவில் தஞ்சம் புக அனுமதி கிடைத்துள்ளது. அகதி என்ற அந்தஸ்துடன் இனி அவர் ரஷ்யாவில் வாழலாம். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து ஸ்னோடென் விரைவில் ஏர்போர்ட்டில் இருந்து வெளியே வருவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்